Thursday, July 9, 2020

கத்தாரில் மேலும் 608 பேருக்கு கொரோனா


கத்தாரில் மேலும் 608 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 08, 2020 21:03 | Added : ஜூலை 08, 2020 21:02

தோஹா : கத்தாரில் கொரோனா தொற்று அதிகரித்து மேலும் 608 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கத்தாரில் கொரோனா தொற்றுக்கு இன்று 608 பேர் புதிதாக பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாட்டில் மொத்த நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,01,415 ஆக உயர்ந்தது. கத்தாரில் தொற்றுக்கு புதிதாக 4 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை கத்தாரில் கொரோவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 138 ஆக அதிகரித்தது. ஒரு நாளில் நோய் பாதிப்புகளில் இருந்து 1,204 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். கத்தாரில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,107 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் தீவிர சிகிச்சையில் 712 பேர் மற்றும் சிக்கலான மற்றும் பாதிப்புகளை கொண்ட 154 பேர் உட்பட 5,308 பேர் மொத்தமாக சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5,202 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளன. கத்தாரில் தொற்று நோய்க்கு இதுவரை 3,96,199 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024