Friday, April 14, 2017

சுடுகாட்டில் இலவச 'வை - பை' வசதி; முதல்முறையாக மாநகராட்சியில் அறிமுகம்

பதிவு செய்த நாள் 14 ஏப்  2017  01:02



சென்னை: தமிழகத்திலேயே முதல்முறையாக, சென்னை மாநகராட்சி சுடுகாட்டில், நாளை முதல், இலவச, 'வை பை' வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், ஈமச்சடங்கு நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியாதோர், ஆன்லைன் மூலம், அதை பார்க்கலாம்.

கண்காணிப்பு கேமரா

சென்னை மாநகராட்சி பராமரிப்பில், 136 சுடுகாடுகள் உள்ளன. இவற்றில் குறிப்பிட்ட சில சுடுகாடுகளை, தனியார் தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பிற்கு, மாநகராட்சி அனுமதி வழங்கி வருகிறது.இதில், ஐ.சி.டபிள்யூ.ஓ., என்ற தொண்டு நிறுவனத்திடம், 2014 மார்ச் முதல், அண்ணா நகர் மண்டலம், வேலங்காடு மயானம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது இந்த தொண்டு நிறுவனம், மாநகராட்சியின் ஏழு மயானங்களை பராமரிக்கிறது. இந்நிறுவனம், மாநகராட்சியின் ஒத்துழைப்போடு, மயானங்களில் பல்வேறு புதுமைகளை செய்து வருகிறது.

மயானங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன; பராமரிப்பாளர் பணியில், பெண்களே இருப்பர்; ஈமச் சடங்கு செய்ய சுடுகாட்டிற்கு வருவோர், ஓய்வெடுப்பதற்கு வசதியாக இருக்கை மற்றும் ஏர் கூலர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மைக் மூலம் சில அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பூ மாலைகளை, குப்பையில் வீசாமல், சேகரித்து அதில் இருந்து உரம் தயாரித்து, சுடுகாட்டில் வளர்க்கப்படும் பூச்செடிகள், மரங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து பதிவுகளும் கணினியில் ஏற்றம் செய்யப்படுகின்றன.

இவ்வாறு, மயான பராமரிப்பு பணியில் அசத்தும், இந்த தொண்டு நிறுவனம், மேலும் ஒரு புதுமையாக, தமிழகத்திலேயே முதல்முறையாக, சுடுகாட்டில், இலவச வை - பை வசதிக்கு செய்துள்ளது. நாளை முதல், வேலங்காடு மயானத்தில், இந்த வசதி கிடைக்கும்.

நேரலை

மயான பராமரிப்பாளர் பிரவீனா கூறியதாவது: அடுத்தகட்டமாக, மற்ற மயானங்களிலும், வை - பை வசதி ஏற்படுத்தப்படும். சில நேரங்களில், இறந்தவரின் மகன், மகள், உறவினர்கள், வெளிநாடுகளில் இருந்து, உடனடியாக, சென்னைக்கு வர முடியாத சூழல் உள்ளது. அவ்வாறு வெளிநாடுகளில் இருப்போர், வை - பை வசதி மூலம், ஆன்லைனில், ஈமச் சடங்கு நிகழ்ச்சியை நேரலையில் பார்த்து, சற்று ஆறுதல் அடையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Driverless metro to begin trials at Madhavaram by '28

Driverless metro to begin trials at Madhavaram by '28  24.12.2024 Chennai : Chennai Metro Rail Limited (CMRL) will begin testing its fir...