Friday, April 14, 2017

வளமானவாழ்வு தரும் வடபழநியாண்டவர்


பதிவு செய்த நாள் 14 ஏப் 2017  01:24




வளமான வாழ்வு தரும் முருகன், சென்னையில் வடபழநியாண்டவர் என்ற பெயரில் வீற்றிருக் றார். தமிழ் புத்தாண்டு நாளில் இவரைப் பற்றி அறிந்து கொள்வோமா!

தல வரலாறு

அண்ணாசாமிதம்பிரான், ரத்தினசாமி தம்பிரான், பாக்கியலிங்க தம்பிரான் என்னும் மூன்று முருக பக்தர்களால் வடபழநியாண்டவர் கோவில் உருவாக்கப்பட்டது. இவர்களில் அண்ணாசாமி தம்பிரான் கோவில் தோன்ற மூல காரணமானவர். தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தினார். ஒரு மேடை அமைத்து, பழநியாண்டவர் படத்தை வைத்து பூஜை செய்து வந்தார். இவர் வழிபட்ட முருகன் படம், உட்பிரகாரத்தின் வடக்கு
மண்டபத்தில் உள்ளது.

அண்ணாசாமி தம்பிரானின் தொண்டரான ரத்தினசாமி தம்பிரானும் முருகனுக்கு நாக்கு காணிக்கை செலுத்தினார். இவர் காலத்தில் தான் இங்கு முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்
பட்டது. இப்போதுள்ளகருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்பு கட்டடம் கட்டப்பட்டது. கோவிலின் கருவறையிலும், முதல் உள்பிரகாரத்திலும் கருங்கல் திருப்பணி செய்தவர் பாக்கியலிங்க தம்பிரான். இவர் காலத்தில் தான் கோவில் புகழ் பெற்றது. மூவர் சமாதியும் கோவில் அருகில் உள்ளன.

காலணியுடன் கந்தன்

முருகப்பெருமான் தாமரை பீடத்தின் மீது, வலது பாதத்தை முன் வைத்த நிலையில் காட்சி தருகிறார்.பக்தர்களைக் காக்க முருகன் தயாராகஇருப்பதை இது காட்டுகிறது. காலில் பாத ரட்சை(காலணி) அணிந்துள்ளார். உற்ஸவர் சண்முகர் வள்ளி, தெய்வானை யுடன் வீற்றிருக்கிறார்.

முருகனுக்குரிய கிரகமான செவ்வாய் பகவான் சன்னிதி இங்குள்ளது. ராஜகோபுரம் 72 அடி உயரம் கொண்டது. தங்கத் தேர் உள்ளது. அத்திமரம் தலவிருட்சமாக உள்ளது. சிவ ஆகமப்படி பூஜை நடக்கிறது.

வளமிக்க வாழ்வு

வடபழநியாண்டவரைத்தரிசித்தால் செல்வ வளம் பெருகும். புதிய தொழில் தொடங்கவும், வியாபார வளர்ச்சி பெறவும், திருமணம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் வழிபடுகின்றனர். முடிகாணிக்கை முக்கிய நேர்த்திகடன்.நேரம்காலை 6:00--12:00 மணி மாலை 4:00--19:00 மணிதொலைபேசி:044 -- 2483 6903.

கனி தரிசனம் காண்போமா!

புத்தாண்டு முதல்நாளில் விஷுக்கனி காண்பது மரபு. காலையில், பூஜையறையில், சுவாமி படங் களுக்கு மலர் சூட்ட வேண்டும். கோலமிட்ட பெரிய பலகை அல்லது மேஜையில் கண்ணாடி வைத்து, இருபுறமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். ஒரு தாம்பாளத்தில் பூ, பழம், வெற்றிலை, பாக்கு,கிண்ணங்களில் அரிசி, பருப்பு, தங்க, வெள்ளிக்காசுகள், நகைகள், புது பஞ்சாங்கம் வைக்க வேண்டும்.

மா, பலா, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், கொன்றைப்பூக்கள் அல்லது மஞ்சள் நிற செவ்வந்தி, தென்னம்பூ கொத்து வைக்க வேண்டும். இதை 'விஷுக்கனி தரிசனம்' என்பர். குடும்ப
பெரியவரிடம் ஆசி பெற்று பணம் பெறுவர். புத்தாடை அணிந்து கோவில் வழிபாட்டை முடித்து
அறுசுவை உணவை குடும்பத்துடன் உண்ண வேண்டும்.

ஆண்டெல்லாம் ஆரோக்கியம்

புத்தாண்டன்று பூஜை அறையில் பஞ்சாங்கம் வைத்து அதற்கு பொட்டு, பூ வைத்து பூஜிக்க வேண்டும். பஞ்சாங்கத்தை ஒரு தேவதையாக எண்ணி வணங்கி, அனைவரும் கேட்கும் வண்ணம் வாசிக்க வேண்டும். பஞ்சாங்கம் ஐந்து அங்கங்களைக் கொண்டது.

முதல் அங்கமான திதியைஅறிவதால் லட்சுமியின் அருளும், இரண்டாவதான வாரம் பற்றி (கிழமை) அறிவதால், நீண்ட ஆயுளும், முன்றாவதான நட்சத்திரத்தை அறிவதால் முன்வினை நீங்குவதும், நான்காவதான யோகத்தை அறிவதால், ஆண்டுமுழுவதும் ஆரோக்கியமும்,
ஐந்தாவதான கரணத்தை அறிவதால், செயல்களில் வெற்றியும்உண்டாகும். ஆண்டின் எல்லா நாட்களிலும் பஞ்சாங்கம் படிப்பது விசேஷ நன்மையை தரும்.

இந்த நாள் பொன்னான நாள் வாழ்த்துகிறார் காஞ்சி பெரியவர்

lபிறருக்கு உதவி செய்யவிரும்பினால், இன்றேபொன்னான நாள். இந்நாளைதவற விட்டால், பிறகு கிடைக்காமல் போய் விடலாம்.lமனிதன் பிற உயிர்கள் மீது அன்பு காட்ட வேண்டும். அன்பைக் காட்டிலும் ஆனந்தம் உலகில் வேறில்லை.

*தானங்களில் சிறந்தது அன்னதானம். இதில் மனிதன் முழுதிருப்தியைப் பெறுகிறான்.
*தாயாக விளங்கும் பசுவுக்கு, ஒரு பிடி புல் கொடுப்பதைஅன்றாட கடமையாக கொள்ள வேண்டும்.
*கடவுள் அளித்த இருகைகளில், ஒன்றால் அவரது திருவடியைப் பிடித்துக்கொண்டு, மற்றொன்றால்கடமையில் ஈடுபடுங்கள்.
*உடை மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. உள்ளமும் கண்ணாடி போல இருக்க வேண்டும்.
lநற்செயலில்ஈடுபட வேண்டி யது நம் வேலை.அதற்குரிய பலன் கொடுப்பது கடவுளின் வேலை.
*பிறரதுகுறைகளைப் பொருட்படுத்தாதீர்கள்.அவர்களிடமுள்ள நல்ல அம்சங்களைப் பாராட்ட
தவறாதீர்கள்.
*எதையும் அலட்சிய மனோபாவத்துடன் அணுகக்கூடாது. சிறிய விஷயமாக இருந்தாலும்
அக்கறையுடன் செயல்படு.
*அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையே அன்றி வேறில்லை.
*உழைப்பதற்கு இருகைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கடவுள் அளித்திருக்கிறார்.அதன் மூலம் நற்செயலில் ஈடுபடு.
*மனதை ஏதாவது ஒரு நற்பணியில் எப்போதும் செலுத்திக் கொண்டிருந்தால் மனத்துாய்மை யுடன் வாழ முடியும்.
*எதையும் அனுபவத் தால் அறிய வேண்டும் என்பதில்லை. பெரியவர்களின் அறிவுரையை கேட்டாலே அனுபவம் தானாகவே கிடைத்து விடும்.

புத்தாண்டின்கிரக பெயர்ச்சிகள்

குரு ஆவணி 16 (செப்.1)ல் கன்னி ராசியில் இருந்துதுலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.ராகு ஆடி10 (ஜூலை 26)ல் சிம்ம ராசியில் இருந்து கடகத்திற்கும், கேது கும்பத்தில் இருந்து மகரத்திற்கும் பெயர்ச்சியாகின்றனர்.சனி மார்கழி 3 (டிச.18)ல்விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

அக்னி நட்சத்திர காலம்

நவக்கிரகங்களில் சூரியன் முதன்மையானவர். ஒரு ராசியில் ஒரு மாதம் சஞ்சரிப்பார். இவர் முதல் ராசியான மேஷத்திற்கு வரும் நாளை, தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். மேஷ ராசியில் சூரியன் உச்ச பலம் பெறுவார். அதையே 'அக்னிநட்சத்திர காலம்' என்கிறோம். சித்திரை 21 முதல் வைகாசி 14 வரை (மே4--28) கத்திரி வெயில் இருக்கும். இந்த ஆண்டு மே 4, மதியம் 1:49 மணிக்கு அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகி, 28 இரவு 7:57 மணிக்கு முடிகிறது. இந்த கால கட்டத்தில் மாரியம்மனுக்கு கஞ்சி படைத்து வழிபட்டால் மழை பொழியும் என்பது ஐதீகம்.

இரண்டு சந்திரகிரகணம்

தமிழ் புத்தாண்டில் இரண்டு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.ஆடி 22 (ஆகஸ்ட் 7) இரவு 10:53- - 12:48 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது.உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தினர், திங்கள்கிழமையில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.தை 18 (2018 ஜன.31) மாலை 5:17 - இரவு 8:41 மணி ஏற்படும் சந்திர கிரகணத்தன்று புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்
திரத்தினர், புதன்கிழமையில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஆயிரம்மடங்குலாபம்வேண்டுமா?: வழிகாட்டுகிறார் வாரியார்

* ஒரு விதையில் வளர்ந்த மரம் ஆயிரமாயிரம் பழங்களை தரும். பிறருக்கு செய்த நன்மையும் அவ்வாறே ஆயிரம் மடங்கு லாபமாக நம்மிடமே திரும்பி வரும்.
* மற்ற உயிர்களுக்குஇல்லாத நகைச்சுவை உணர்வு மனிதனுக்கு மட்டும் உண்டு. சிரிப்பு கடவுள் நமக்கு அளித்த கொடை. அன்புணர்வுடன் சிரித்து மகிழுங்கள்.
* உடலை வளர்க்க உணவு அவசியம். உயிரை வளர்க்க அன்றாடம் கடவுள் வழிபாடு அவசியம்.
* பசுவின் உடலெங்கும் பால் இருந்தாலும், மடி மூலமாக மட்டும் பெற முடியும். கடவுள் எங்கும்நிறைந்திருந்தாலும் கோவில் வழிபாட்டால் மட்டுமே அருள் பெற முடியும்.
* உடல் பலம் பெற, தேகப்பயிற்சி செய்வது போல, தினமும் வழிபாடு செய்தால் உயிர் பலம் பெறும்.
* மனம் இருந்தால் மானம் இருப்பதும், தனம் (செல்வம்) இருந்தால் நாலு பேருக்கு நல்லது நடக்க தானம், தர்மம் செய்வது அவசியம்.
* நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுத்து நட்பு கொள்ளுங்கள். அந்த நட்பு மாலை நேர நிழல் போல் வளர்ந்து கொண்டே போகும்.
* படிப்பு, பணத்தால் மட்டும் பெருமை வருவதில்லை. நல்ல பண்பு, ஒழுக்கம் இருந்தால் மட்டுமே வாழ்வு அர்த்தமுள்ளதாகும்.

No comments:

Post a Comment

Rain may be back for Christmas Expect Light To Moderate Rain Today, Says IMD

Rain may be back for Christmas Expect Light To Moderate Rain Today, Says IMD TIMES NEWS NETWORK  24.12.2024  Chennai : The weather system ov...