Friday, April 14, 2017

சுற்றுலாவுக்கான சிறந்த இடம் ஸ்பெயின்

பதிவு செய்த நாள் 14 ஏப்  2017   02:26



மேட்ரிட்: சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லும் நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்தை பெற்றுள்ளது என உலக பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. 136 நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

ஒரு நாட்டின் மொத்த வருவாயில் சுற்றுலாத்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன்மூலம் அந்நாட்டுக்கு உலகளவில் பெருமையும் கிடைக்கிறது. 2016ம் ஆண்டுக்கான உலகளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தாண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுற்கு அந்நாட்டில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக கூறப்படுகிறது. ஸ்பெயினில் சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஸ்பெயினில் நிறைவாக உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி மூன்றவாது இடத்திற்கும், கடந்தாண்டில் 9வது இடத்தில் இருந்த ஜப்பான் இம்முறை நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 40வது இடத்தில் உள்ளது.

'டாப் 10' நாடுகள்

1. ஸ்பெயின்
2. பிரான்ஸ்
3. ஜெர்மனி
4. ஜப்பான்
5. பிரிட்டன்
6. அமெரிக்கா
7. ஆஸ்திரேலியா
8. இத்தாலி
9.. கனடா
10. சுவிட்சர்லாந்து

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024