ரயில்வே ஸ்டேஷன் ஜப்தி : கரூரில் சலசலப்பு
கரூர்: கரூர் - சேலம் அகல ரயில் பாதை பணி, 1999ல் துவங்கப்பட்டது. கரூர் அருகில் உள்ள ஆத்துார், காதப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 325 பேரின் நிலம், ரயில் பாதைக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இவர்கள், அரசு வழங்கிய இழப்பீடு குறைவாக உள்ளதாக கூறி, கரூர் சார்பு நீதிமன்றத்தில், 2002ல், வழக்கு தொடர்ந்தனர். விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க, 2012ல், உத்தரவிட்டது. நிலம் அளித்த, 325 பேரில், 310 பேருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ௫ கோடி ரூபாய் இழப்பீடு கிடைக்காத, ஆறுபேர் மேல்முறையீடு செய்தனர். இழப்பீடு வழங்காததால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை, ஜப்தி செய்ய, கரூர் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன்படி, நேற்று பகல், 11:30 மணிக்கு நீதிமன்ற அமீனாக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய வந்தனர். ரயில் நிலைய மேலாளர் சுரேந்தர்பாபு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.'வரும், 27ம் தேதிக்குள் இழப்பீடு தொகை செலுத்த, நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது' என்ற தகவல், அமீனாக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பின், அவர்கள் திரும்பி சென்றனர்.

No comments:
Post a Comment