சொத்து குவிப்பு வழக்கில் 'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு சிறை
பதிவு செய்த நாள்
06
ஏப்
2017
23:04
திருச்சி: வருமானத்துக்கு அதிகமாக
சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரின்ஸ்
தங்கவேலுக்கு, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், இரண்டாண்டு சிறை தண்டனை
விதித்தது. தமிழகத்தில், 1991 - 96 வரையிலான, அ.தி.மு.க., ஆட்சியில்,
முசிறி தொகுதி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் பிரின்ஸ் தங்கவேல்,
53. இவர், பதவி காலத்தில், 20.80 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக
சொத்து சேர்த்ததாக, 1997ல் திருச்சி ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு
செய்தனர். இதன் விசாரணை, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில்
நடந்து வந்தது. இதில், 44 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; 88 ஆவணங்கள்
தாக்கல் செய்யப்பட்டன.
ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் அடிப்படையில் நேற்று,
ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார். இதில், முன்னாள்,
எம்.எல்.ஏ., பிரின்ஸ் தங்கவேலுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 3,000
ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனை, மூன்று ஆண்டுக்கு குறைவு
என்பதால், தண்டனை பெற்றவர் மேல்முறையீடு செய்ய வசதியாக, ஒரு மாதத்துக்கு
தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இதையடுத்து, பிரின்ஸ் தங்கவேல்
விடுவிக்கப்பட்டார். இவர், அ.தி.மு.க.,வின், ஓ.பி.எஸ்., அணியில் உள்ளார்.
No comments:
Post a Comment