Friday, April 7, 2017

 மனச்சோர்வு எனும் 'மாயக் கறுப்பாடு' : பொறுத்திரு மகிழ்ந்திருவென்றிடு! - இன்று உலக மனச்சோர்வு தினம்

மதுரை: உயிர்த்திருக்கும் நொடிவரை வாழ்க்கை ஒரு போராட்டக்களம் தான். மலர்ப்பாதையில் நடந்து செல்பவனுக்கு ரசிப்பதைதவிர வேறு என்ன வேலை. முட்பாதையை சுத்தம் செய்து தன்னை பயணிக்கச் செய்பவனுக்கே அனுபவம்ஆற்றலையும், அறிவையும் கொடுக்கும். தன்னை அறிவதே அறிவினம். தன்னை வெல்வதே மதியினம்.நெல்லின் பத்துமாத பொறுமை சோறாகிறது. மனிதனின் பத்துநொடி பொறுமை பேராகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் இந்தாண்டு நோய்க்கான தலைப்பு மனச்சோர்வு தினம்… சோர்வை விரட்டி மனதை சுகப்படுத்தும் வழிகளைச் சொல்கின்றனர், மனநல நிபுணர்கள்.

சோகங்கள் பொதுவானதுதான் : மனநல நிபுணர் கவிதாபென், மதுரை: சோகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஒருநாள், இரண்டு நாளில் சரியாகிவிடும். சிலருக்கு 24 மணி நேரமும்
சிரிக்க, ரசிக்க முடியாமல், துாங்க முடியாமல் மனம் தவிப்பது போல தோன்றும். அதிகாலையில் எழுந்து உட்கார்ந்து கொள்வர். சாதாரண வேலை கூட சோர்வைத்தரும். தொட்டதற்கெல்லாம் அழுகை வரும். மனதில் பத்து கிலோ எடை வைத்தது போல பாரமாக இருக்கும். இவையெல்லாம் ஒன்றிரண்டு நாட்களில் ஆரம்பித்து, படிப்படியாக அதிலிருந்து வெளியேறி விடுவோம். இரண்டு வாரம் கடந்தும் வெளிவர முடியாவிட்டால் கட்டாயம் மருத்துவ கவுன்சிலிங் தேவை. மகப்பேறுக்கு பின்சிலருக்கு மனச்சோர்வு வந்து தன்னாலே சரியாகிவிடும். தைராய்டு ைஹப்போ தைராய்டிசம் இருந்தாலும் மனச்சோர்வு வரலாம். அதற்கு மருந்து அவசியம். மனச்சோர்வு அதிகமானால் 'சைக்கோசிஸ்' எனப்படும் நிலைக்கு சென்றுவிடுவர். தன்னாலே முணுமுணுத்துக் கொண்டே, மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு, தன்னை கவனிக்காமல் கவிழ்ந்து உட்கார்ந்திருப்பர். படுக்கையை விட்டு எழுவதற்கு கூட தெம்பிருக்காது. அவர்களால் அந்த வேலையை செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்து, மருத்துவத்தின் மூலம் சரிப்படுத்த வேண்டும். ஐம்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு பிடிப்பில்லாத நிலை ஏற்படும். குழந்தைகள் திருமணம், படிப்பு என்ற நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிவிட அரவணைக்க ஆளில்லாத தனிமையும் மனச்சோர்வை ஏற்படுத்தும்.

'மூடு அவுட்' மாற்றுவது எப்படி : 'மூடு அவுட்' என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருப்போம். தினமும் அரைமணி நேரம் வாக்கிங், ஜாகிங், ஸ்கிப்பிங் செய்யலாம். பிடித்தமான டான்ஸ் ஆடலாம். எதுவும் தெரியாவிட்டால், வீட்டுப் படிக்கட்டுகளில் அடிக்கடி ஏறியிறங்கலாம். இதன்மூலம் உடலில் 'செரட்டோனின்' எனப்படும் 'நியூரோ டிரான்ஸ்மீட்டர்' சுரந்து மனச்சோர்வுக்கு மருந்தாகி விடும்.

சந்தோஷமான ஈடுபாடு : எதெல்லாம் மனதுக்கு சந்தோஷம் தருகிறதோ அதைச் செய்யலாம். ஒரு சிலருக்கு செடிகள் வளர்ப்பில் ஈடுபாடு இருக்கலாம். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படலாம். இசையை ரசிக்கலாம். வளர்ப்புப் பிராணிகளிடம் ஆர்வம்காட்டலாம்.தொடர்புக்கு
rmjarunkumar@gmail.com
மதுரை அரசு மருத்துவமனை
மனநலத்துறை தலைவர்

டி. குமணன் : ஏமாற்றம் வந்தால் சிறிதுநேரத்திற்கு 'மூடு' மாறும், இயற்கையாகவே அது
சரியாகிவிடும். எந்த காரணமும் இல்லாமல் யாரையும் இந்நோய் பாதிக்கலாம். மூளையின்
வித்தியாசமான செயல்பாடுகள் இயற்கை, செயற்கை மாற்றங்கள் மூலம் உருவாகலாம். மரபணு காரணமாகவும் இருக்கலாம். தேவையற்ற மருந்துகளை மருத்துவர்கள் அனுமதியின்றி சாப்பிட்டால் கூட மனச்சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

காது கொடுத்து கேளுங்கள் : தற்கொலை செய்யப்போவதாக சொன்னால் காது கொடுத்து கேளுங்கள். வாழ்ந்து என்ன பிரயோஜனம் என ஒருவர் பேச ஆரம்பித்தாலே உடனடியாக கவனிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் தவறானதாக இருக்கும். இந்த எண்ணம் வந்துவிட்டால் நண்பர்களை, சொந்தங்களை, பெற்றோர்களை பார்த்துவிட்டு வருவர். சொத்துக்களை செட்டில் செய்வர். தனியாக இருக்கும் ஐந்து நிமிடங்களில் தான் தற்கொலை நிகழ்கிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நல்ல வேலை பார்த்தால் ராஜினாமா செய்வர். அவர்களின் முடிவெடுக்கும் திறனை கட்டுப்படுத்தி மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் எளிதாக குணப்படுத்தலாம். சாதாரண மருந்துகளின் மூலம் இரண்டாவது வாரத்திலேயே குணப்படுத்தி விடலாம். அதிகபட்சமாக 6 முதல் 9 மாதங்கள்வரை மருந்துகளை எடுத்தால் போதும்.

ஓடி ஓடி உழைக்கணுமா : நோயை வராமல் தடுக்க முடியாது. மனச்சோர்வு உருவாகும் சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம். பசியின்மை, துாக்கமின்மை இரண்டும் நாமாக உருவாக்குவது தான். உதாரணத்திற்கு ஓய்வின்றி அதிகமாக உழைப்பது, எல்லா வேலைகளையும் தானே செய்வது,
ஒரே நேரத்தில் அதிகவேலைகளை செய்வது, துாக்கத்தை அடிக்கடி தவிர்ப்பது, ரிஸ்க் எடுப்பது... இவற்றையெல்லாம்நாம் தவிர்த்து விடலாம். உடலுக்கு தேவையான துாக்கத்தை உருவாக்க வேண்டும். வேலை பார்க்கும் இடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல், நட்பு பாராட்டினால் மனச்சோர்வு வராது. மனச்சோர்வுக்கு ஆல்கஹால் தீர்வாகாது.
ஆண்கள் வேலையில்லாதநிலை, பணி ஓய்வு நிலையில் தனிமையும், விரக்தியும் ஏற்படும். ரிடையர்மென்ட்டுக்கு பின் தங்களை ஏதாவது ஒரு வேலையில் ஈடுபாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்புக்கு
kums2sarad@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024