Wednesday, April 12, 2017

89 கோடி கறுப்பு பணமா; கள்ள பணமா? விஜயபாஸ்கரை விடாத அதிகாரிகள்

பதிவு செய்த நாள்
ஏப் 11,2017 13:47




விஜயபாஸ்கரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள்

சென்னை:

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், இரண்டு நாட்களுக்கு முன், வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தி, பல்வேறு விதமான ஆவணங்களை கைப்பற்றிச் சென்றுள்ளனர்.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், முறைகேடாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்காக, வருமான வரித் துறை அதிகாரிகள் முன், ஆஜரானார்.

கேள்விகள் என்ன:வருமான வரித் துறை அதிகாரிகள், அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்ட கேள்வி விவரங்கள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளன.

1.அமைச்சராக இருக்கும் நீங்கள், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, தனிப்பட்ட முறையில் எவ்வளவு செலவு செய்தீர்கள்?

2.மொத்தமாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் தங்கமணி வரையில், பலர் மூலம், 89 கோடி ரூபாய் அளவுக்கு, ஆர்.கே.நகர் மக்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் கிடைத்துள்ளன. ஆர்.கே.நகர் தேர்தலுக்காக, தினகரன் தரப்பில் இருந்து, இவ்வளவு ரூபாய் மட்டும்தான், செலவு செய்யப்பட்டுள்ளதா?

3.அரசு மருத்துவரான பாலாஜிக்கு, செப் 1, 2016ல், ஐந்து லட்ச ரூபாய் கொடுத்துள்ளீர்கள். அது எதற்காக கொடுக்கப்பட்டது?

4.பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எவ்வளவு பணம், இதுவரை கொடுக்கப்பட்டது? உங்களிடம் இருந்து அதிகப் பணம் வாங்கியது, அரசியல்-புலனாய்வுப் பத்திரிகையின், செய்தி ஆசிரியர் என்கின்றனரே. இது சரியா?

5.அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து சப்ளை செய்யும் கம்பெனிகளிடம் இருந்து 45 சதவீத கமிஷன் பெற்றதாக சொல்கின்றனரே..?

6.ஆர்.கே.நகர் தொகுதிக்காக தயார் செய்து வைக்கப்பட்டு பின், கொடுக்கப்பட்ட பணத்துக்கான கணக்கு-வழக்கு என்ன?

7.ஆர்.கே.நகரில் மக்களுக்கு வழங்கப்பட்ட பணம்… கறுப்புப் பணமா? நல்ல பணமா?
















8.ஆர்.கே.நகரில் செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் 89 கோடி ரூபாய்க்கான வரவு-செலவு கணக்கு என்ன? அந்த பணத்துக்கு வருமான வரி கட்டப்பட்டுள்ளதா?

இப்படி நிறைய கேள்விகள், விஜயபாஸ்கரிடம், வருமான வரித் துறை அதிகாரிகள் கேட்க, அவர், அதிர்ந்து போய், பல கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024