ஞாயிற்றுகிழமைகளில்
பெட்ரோல், டீசல் கிடைக்காது
புதுடில்லி: 'பெட்ரோல் பங்க்குகள் ஞாயிற்றுக் கிழமைகளில் இனி இயங்காது' என, இந்திய பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும், 'மன் கி பாத்' என்னும் ரேடியோ நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களி டையே, பிரதமர் நரேந்திர மோடி, உரையாற்றி வருகிறார். கடந்த மாதம் இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'வாரத்துக்கு ஒரு நாள்,
எரிபொருளில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளையடுத்து, 'அடுத்தமாதம், 14 முதல், ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறை விடப்படும்' என, சி.ஐ.பி.டி., என்னும் இந்திய பெட்ரோல் டீலர் கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்திய பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் சத்தியநாராயண் கூறியதாவது:
எங்கள் கூட்டமைப்பின் கீழ், கேரளா, தமிழகம், கர்நாடகா மற்றும்மஹாராஷ்டிர மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகள், இயங்குகின்றன. எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி, வாரந் தோறும் ஞாயிறு அன்று, அனைத்து பங்க்குகளும்இயங்காது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், மற்றொரு அமைப்பான, அகில இந்திய பெட்ரோல் டீலர்கள் சங்கத் தலைவர் அஜய் பன்சால் கூறுகையில், ''டில்லி உள்ளிட்ட, 21 மாநிலங்களில், எங்கள் சங்கத்துக்குட் பட்ட பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்; கமிஷன் தொகை தொடர்பான பேச்சு, தொடர்ந்து நடக்கும், என்றார்.
No comments:
Post a Comment