9 இடங்களில் வெயில் சதம்: சேலம், பரமத்தியில் 105 டிகிரி
By DIN |
Published on : 03rd April 2017 04:41 AM |
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 9 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக சேலம் மற்றும் கரூர் பரமத்தியில் 105 டிகிரி வெயில் பதிவானது.
கோடை காலம் தொடங்கிவிட்டதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சிறிது சிறிதாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரிக்கவே செய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது: கோடை காலம் தொடங்கியுள்ளதால் அடுத்த சில தினங்களுக்கு 1 முதல் 2 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களைக் காட்டிலும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவித்தனர்.
9 இடங்களில் 100 டிகிரி: ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 9 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி, சேலம், தருமபுரி, வேலூர் ஆகிய இடங்களில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
சேலம், கரூர் பரமத்தி 105
திருச்சி, வேலூர் 102
தருமபுரி 103
கோவை, மதுரை, பாளையங்கோட்டை 101
சென்னை 100
திருச்சி, வேலூர் 102
தருமபுரி 103
கோவை, மதுரை, பாளையங்கோட்டை 101
சென்னை 100
No comments:
Post a Comment