Monday, April 3, 2017

ரசிகர்களை புறக்கணித்தார் நடிகர் ரஜினி
 
'நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்' என, அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் இருந்து, சென்னையில் குவிந்த ரசிகர்கள், அவரை சந்திக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


நடிகர் ரஜினி, ஒவ்வொரு மாதமும், இரண்டா வது ஞாயிறு அன்று ரசிகர்களை சந்திப்பது வழக்கம். 1998ல், சந்திப்பு முடிந்து திரும்பிய சில ரசிகர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனால், ரசிகர்கள் சந்திப்பை நிறுத்தினார். பின், பிறந்த நாளின் போது மட்டும், வீட்டிற்கு வரும் ரசிகர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு, 2008 வரை நடந்தது.

இந்நிலையில், நடிகர் ரஜினி வரும், 12 முதல், 17 வரை, ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கிறார். இதற்கான ஆலோசனை கூட்டம், கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரசிகர் மன்ற பொறுப்பாளர் சத்தியநாராயணா மற்றும் நிர்வாகி சுதாகரன் தலைமையில், நேற்று நடந்தது.
அதில், மாவட்ட வாரியாக, ரசிகர்களை ரஜினி சந்திக்கும் நாட்கள்; சந்திப்பின் போது, ரசிகர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, விவாதிக்கப்பட்டது.

ரஜினியை சந்திக்க வருவோருக்காக, நிர்வாகி களிடம், அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. ஆலோசனை கூட்டத்திற்கு ரஜினி வருவார் என, கூறப்பட்டிருந்தது. ஆனால், அவர் பங்கேற்காததால், ரஜினியை காண ஆவலோடு வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து, ரசிகர்கள் கூறியதாவது: தமிழகத்தின் தற்போதைய சூழலில், மக்களின் தேவை அறிந்து செயல்பட, ரஜினியால்மட்டுமே முடியும். இனியும் தாமதிக்காமல், புதுக்கட்சி அறிவிப்பை அவர் வெளியிட வேண்டும். 20 ஆண்டுகளுக்கு பின், ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அப்போது, அரசியல் கட்சி துவக்க வேண்டும் என, வலியுறுத்து வோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024