Saturday, April 22, 2017



ஆதாரை கட்டாயம் ஆக்கியது ஏன்?  அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
புதுடில்லி: 'வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மற்றும் பான் கார்டு வாங்குவதற்கு, ஆதார் எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கியது ஏன்?' என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.



பான் கார்டுகள் மூலம் மோசடி நடப்பதைதடுக்கும் வகையில், பான் கார்டு வாங்கு வதற்கும், வருமான வரி கணக்கு தாக்கலுக்கும், ஆதார் எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கி, நிதி மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள் ளது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி, ஏ.கே. சிக்ரி தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'பான் கார்டுக்கு விண்ணப்பிக் கும் போது, ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பதைகட்டாய மாக்கியது ஏன்' என, அமர்வு கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறிய தாவது: பொய்யான தகவல்கள் அளித்து, பலர் பான் கார்டு பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள் ளது. பல்வேறு போலி பெயர்களில், பொய்யான விலாசத்தை காட்டி, ஒருவரே பல பான் கார்டுகளை

பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், போலி நிறுவனங்களில் கறுப்புப் பணத்தைபதுக்கி வைப்பதும் நடந்துள்ளது.

அதை தடுக்கும் வகையிலேயே, பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பொய்யான ஆதாரங்களை சமர்ப்பித்து, மொபைல் இணைப்பு பெறுவது தொடர் பான வழக்கில், மோசடியை தடுக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 

அதுபோலவே, வருமான வரி கணக்கில் மோசடி செய்வதை தடுக்கவும், போலியான பெயர்களில் பான் கார்டு வாங்குவதை தடுக்க வும், ஆதார் எண் குறிப்பிடுவது அவசியம் என்று கூறப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் வாதிட்டார். அதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை, 25க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024