விரைவான நெட்வொர்க்’ விளம்பரத்தை நிறுத்த ஏர்டெல் நிறுவனத்துக்கு உத்தரவு
விரைவான நெட்வொர்க் என தனது விளம்பரங்களில் ஏர்டெல் நிறுவனம் குறிப்பிடுவதை
நிறுத்து மாறு இந்திய விளம்பர தர கவுன் சில் (ஏஎஸ்சிஐ) ஏர்டெல் நிறு
வனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இணையதள வேகத்தை அள விடும் ஊக்லா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து தவறான பிர
சாரத்தை செய்வதாகவும் இதைத் தடுக்குமாறு முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொடுத்திருந்த புகாரின் அடிப் படையில் இத்தகைய
உத்தரவை ஏஎஸ்சிஐ பிறப்பித்துள்ளது.
டிவி விளம்பரங்களில் குறிப்பிடும் இத்தகைய வாசகத்தை நிறுத்த வேண்டும்
அல்லது இதை மாற்றி ஒளிபரப்ப வேண்டும் என ஏஎஸ்சிஐ தனது உத்தரவில்
குறிப்பிட்டுள்ளது. இத்தகைய விளம்பரங்கள் ஏப்ரல் 11-ம் தேதிக்குள்
மாற்றப்பட வேண்டும் என்று கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.
இணையதள வேகத்தை அள விடுவதற்கு ஸ்பீட்டெஸ்ட் எனும் செயலி
பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலியை ஊக்லா எனும் நிறுவனம் அளிக்கிறது. இந்த
நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து அந்நிறுவனத்துக்குச்
சாதகமாக சான்று அளிக்கிறது. இதுபோன்ற சான்றை அளிப்பதற்காக இந்நிறுவனம் பணம்
பெறுவதாக ஜியோ குற்றம் சாட்டியுள்ளது. இதே நிறுவனம் இதுபோன்ற சான்று
அளிப்பதற்கு தங்களை அணுகியதாக ஜியோ குறிப்பிட்டுள்ளது.
இந்த புகார் குறித்து ஏஎஸ்சிஐ- யின் புகார்களை விரைவாக விசாரிக்கும் குழு
(எப்டிசிசி) தீர விசாரித்து ஜியோ நிறுவனத் தின் குற்றச்சாட்டில் உண்மை
இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும் ஏர்டெல்லின் விளம்பரம் தவறான கருத்தை
ஏற்படுத்து வதாக குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக எப்டிசிசி தனது தீர்ப்பு
விவரத்தை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இணையதளத்தில்
வெளியிட்டுள்ளது.
அதில் ஏர்டெல் இணைப்பு அது விளம்பரத்தில் குறிப்பிட் டுள்ளதைப் போல விரைவான
இணைப்பை நாட்டின் அனைத்து பகுதியிலும் அளிக்கவில்லை. மேலும் இது ஜியோ
வாடிக்கை யாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்
டுள்ளது. கிடைத்த விவரங்களின் அடிப்படையில் ஒப்பீடு செய்த போது, ஏர்டெல்
குறிப்பிடும் அளவுக்கு விரைவான இணைப்பு கிடைக்கவில்லை. அந்நிறுவனம்
விளம்பரப்படுத்திய அளவுக்கு அதில் உண்மை இல்லை என்பது புலனாகியுள்ளது.
இருப்பினும் விளம்பரம் மூலம் அந்நிறுவனம் ஆதாயமடையப் பார்க்கிறது என்று
குறிப்பிட்டுள்ளது.
தனது குற்றச்சாட்டில் உள்ள நியாயத்தை உணர்த்தும் விதமாக சில சான்றுகளையும்
அளித்துள்ளது. அதாவது இரட்டை சிம் கொண்ட ஸ்மார்ட்போனில் முதலாவது பகுதியில்
ஏர்டெல் சிம்கார்டை போட்டுவிட்டால் அது அதி விரைவான இணைப்பை
அளிப்பதாகவும், இரண்டாவது சிம் பகுதியில் ஜியோ சிம்கார்டை போட்டால் அதன்
வேகம் குறைவதாகவும் ஊக்லா குறிப்பிட்டுள்ளதை ஜியோ ஆதாரங்களுடன்
நிரூபித்துள்ளது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஏர்டெல் நிறுவனம் மறுத்துள்ளது. இது தங்கள்
பிராண்டின் பெயருக்குக் களங்கம் ஏற்ப டுத்தும் செயல் என தெரிவித் துள்ளது.
இதனால் தங்களது வாடிக் கையாளர்கள் குழப்பமடைவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தங்களது நிறுவனத்தின் இணையதள வேகத்தை ஊக்லா நிறுவனம்தான் அளவிட்டுள்ளது.
இந்தியாவின் அதிவிரைவான மொபைல் நெட்வொர்க் என ஊக்லா நிறுவனம் ஏர்டெல்
நிறுவனத்துக்கு சான்றளித்துள்ளது.
No comments:
Post a Comment