Saturday, April 8, 2017

ரயில் கால அட்டவணை செப்., 30 வரை நீட்டிப்பு

பதிவு செய்த நாள் 08 ஏப்
2017
01:30


சென்னை: தெற்கு ரயில்வே, ரயில் கால அட்டவணை, செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தெற்கு ரயில்வேயால், ஒவ்வொரு ஆண்டும், ஜூலை, 1ல், புதிய ரயில் கால அட்டவணை வெளியிடப்படும். கடந்த ஆண்டில், இந்த அட்டவணை, அக்., 1ல் வெளியானது. இந்த ஆண்டாவது, ரயில் கால அட்டவணை, ஜூலை, 1ல் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், 'புதிய ரயில் கால அட்டவணை, ஜூலை, 1ல் வெளியாகாது. எனவே, ஏற்கனவே உள்ள ரயில் கால அட்டவணை, செப்., 30 வரை நீடிக்கப்படுகிறது' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024