இரு சக்கர வாகனங்களில், தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்க, எண்ணெய் நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. கார், மோட்டார் பைக் உள்ளிட்ட வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவது, சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்க் வெடித்து, விபத்தும், அதனால் உயிரிழப்பும் நேரிடுகிறது.இந்தியன் ஆயில் நிறுவனத்தினர், பெட்ரோல் பங்க்குகளில், விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டி வைத்துள்ளனர். அதில், 'வானிலையில் நிலவும், அதிக வெப்பத்தால், வாகனங்களில் பெட்ரோல் டேங்க் வெடிக்கக் கூடிய அபாயம் உள்ளது. பெட்ரோல் டேங்குகளை முழுவதுமாக நிரப்பும் போது, அதனுள், காற்று சுழற்சிக்கு இடமில்லாமல், பெட்ரோல் சூடாகி வெடிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, பெட்ரோல் டேங்கில் பாதியளவு, பெட்ரோல் நிரப்பினால் போதும்' என, கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment