மதுரை: எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக போதிய
இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
தள்ளுபடி செய்தது.
ராமநாதபுரம் ராஜு தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் மருத்துவக் கல்லுாரிகளில் 2009--10 முதல் 2016--17 வரை எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பிற்கு 35 ஆயிரத்து 357 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் வெறும் 278 பேர்தான். இது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. இதிலிருந்து தமிழக அரசுப் பள்ளிகளின் நிலைமையை அறிய முடியும்.அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையான கல்வி மற்றும் மதிப்பெண் பெற முடியவில்லை.எம்.பி.பி.எஸ்.,மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, போதிய இட ஒதுக்கீடு வழங்க, நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராஜு மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் கொண்ட அமர்வு,'மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்குமாறு அரசுக்கு, இந்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்,' என உத்தரவிட்டது.

No comments:
Post a Comment