சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான, வருமான வரித்துறை பிடி
இறுகுகிறது. அவருக்கு சொந்தமான குவாரியில், மத்திய பொதுப்பணித் துறை
உதவியுடன், ஆய்வுப் பணி துவங்கி உள்ளது.
புதுக்கோட்டை- மற்றும் அன்னவாசல் இடையே, திருவேங்கைவாசல் பகுதியில், 'ராசி புளூ மெட்டல்ஸ்' கல் குவாரி மற்றும், 'கிரஷர்' மையத்தை, விஜயபாஸ்கரின் பினாமி நடத்தி வருகிறார். இதில், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, வருமானம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை வளையத்தில், விஜயபாஸ்கர் சிக்க, இந்த குவாரி மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. அங்கு, 7ம் தேதி, விசாரணைக்கு சென்ற அதிகாரிகள், மலை போல் குவித்துள்ள மணல் மற்றும் ஜல்லியை பார்த்து, வாயடைத்துப் போயினர். இந்நிலையில், நேற்று அங்கு வருமான வரித்துறையினர், மீண்டும் ஆய்வை துவக்கியுள்ளனர்.
500 லாரிகள் : இதுகுறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: திருவேங்கைவாசலில் உள்ள குவாரியில் குவிக்கப்பட்டுள்ள மணல், ஜல்லியை, பல ஆண்டுகளுக்கு விற்கலாம் போல தெரிகிறது. மேலும், மணல், ஜல்லி மற்றும், 'ரெடிமிக்ஸ்' போன்றவற்றின் மதிப்பை ஆய்வு செய்ய, எங்களிடம் நிபுணர்கள் இல்லை. அதனால், மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகளை உதவிக்கு அழைத்து உள்ளோம். அவர்கள், இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள மணல், ஜல்லி மற்றும் இதர பொருட்களின் மதிப்பை ஆய்வு செய்து, எங்களுக்கு அறிக்கை அளிப்பர். அதன் அடிப்படையில், ஒரு ஆண்டில் அங்கு கிடைக்கும் வருவாயை, நாங்கள் ணக்கிட முடியும். அவ்வாறு வரும் தொகையையும், வருமான வரி தாக்கல் படிவத்தில் குறிப்பிட்டுள்ள தொகையையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். அதன் அடிப்படையில், வருமான வரி வசூலிக்கப்படும். மேலும், முந்தைய ஆண்டுகளுக்கான வருமானமும், அதற்காக செலுத்திய வரித்தொகையும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். அது குறைவாக இருப்பதாக தெரிந்தால், அதற்குரிய வருமான வரி வசூலிக்கப்படும். குவாரியில், 500க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகின்றன.
இவற்றுடன், 20க்கும் மேற்பட்ட, 'டாரஸ்' ரக லாரிகள் மற்றும் ஏராளமான, 'ரெடிமிக்ஸ்' உபகரணங்களும் உள்ளன. அவை, யாருக்குச் சொந்தமானவை என்றும், ஆய்வு செய்து வருகிறோம்.
வாக்குமூலம் : மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி, 'எஸ்.ஆர்.எஸ்., மைனிங் நிறுவனத்தில் விஜயபாஸ்கரும், மறைமுக பங்குதாரர்' என, வாக்குமூலம் அளித்துள்ளதால், வேறு குவாரிகளில் இருந்தும், அமைச்சருக்கு வருமானம் வருகிறதா என்பதையும், ஆராய வேண்டியுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
குவாரி என்னுடையதே!: 'திருவேங்கைவாசலில் உள்ள குவாரி, எனக்குச் சொந்தமானது தான்' என, அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்புக் கொண்டுள்ளார். அதை குத்தகைக்கு விட்டுள்ளதாகவும், குறைந்த அளவில் தான் வருமானம் கிடைக்கிறது என்றும் விஜயபாஸ்கர், விசாரணையில் கூறியதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
மந்திரி கைதா? : வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: குவாரியை பொறுத்தவரை, எங்களது இலக்கு வருமான வரி மட்டுமே. அங்குள்ள விதிமீறல்கள் பற்றி, நாங்கள் ஆய்வு செய்யவில்லை. அதுபற்றி, சுற்றுச்சூழல் துறை தான் ஆய்வு செய்து, முடிவெடுக்க வேண்டும்.
மத்திய பொதுப்பணித்துறை ஆய்வு முடிவுகள் வந்த பின், அதுபற்றி சம்பந்தப்பட்ட துறை தொடர்பு கொண்டால், அப்போது, அதை பகிர்ந்து கொள்வது பற்றி பரிசீலிப்போம். அதனால், குவாரி விவகாரத்தில், இப்போதைக்கு கைது என்ற கோணம் எழவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு! : விஜயபாஸ்கரின் குவாரிக்காக, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பமான, 'போர்வெல்' வெடியால், மலைகள் துண்டு துண்டாக பிளக்கப்படுகின்றன. அதன் அதிர்வுகளால், திருவேங்கைவாசல் வியாக புரிஸ்வர் கோவில் மற்றும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள் பாதிப்புக்கு உள்ளாக்கியிருப்பதாக, அப்பகுதியை சேர்ந்தவர்கள் குமுறுகின்றனர். ஆனால், காவல்துறை, மாவட்ட நிர்வாகம், புகார் தர முன்வரவில்லை; அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.
- நமது சிறப்பு நிருபர் -

No comments:
Post a Comment