Thursday, April 6, 2017

வரிச் சலுகை: போலி வீட்டு வாடகை ரசீது சமர்ப்பிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்!

By CP சரவணன்  |   Published on : 06th April 2017 04:37 PM  |
salaried_couple_tax_benifits
போலியாக வீட்டு வாடகை ரசீது சமர்ப்பிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் புதிய விதிமுறையை உருவாக்குவது குறித்து வருமான வரித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
வருமான வரி விலக்கு பெறுவதற்கு வீட்டு வாடகை ரசீதை வருமானவரித்துறையிடம் சமர்ப்பிப்பது வழக்கம். இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் ரசீது, பெரும்பாலும் போலியானவை என்றும் இதன் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நிகழ்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானத்தைக் குறைக்கும் ஒரு கருவியாக இந்தப் போலி வீட்டு வாடகை ரசீதைப் பயன்படுத்தி வருவதால், குடியிருக்கும் வீட்டிற்கு, அளிக்கப்படும் வாடகைக்கு முறையான ஆதாரங்களைக் கோரவும் முடிவுசெய்துள்ளது.
 எனவே இனி வீட்டு வாடகை என்ற பெயரில் அதிகளவில் வருமான வரி விலக்கு பெற திட்டமிட்டுள்ள தனிநபர், வாடகை ஒப்பந்தம், மின்சாரக் கட்டண அறிக்கை, குடிநீர் கட்டண அறிக்கை எனப் பல ஆதாரங்களை அதுவும் குடியிருப்பு வாரியத்திடம் ஒப்புதல் பெற்ற பின்னரே விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுதொடர்பான சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024