Thursday, April 6, 2017

நீங்கள் கணக்கு வைத்திருக்கும் எஸ்பிஐ வங்கிக் கிளை தொடர்ந்து செயல்படுமா?

By ENS  |   Published on : 06th April 2017 11:01 AM  |   
sbi
பெங்களூர்: நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளராக இருப்பின், உங்கள் வங்கிக் கிளை தொடர்ந்து செயல்படுமா என்பதை அறிய இன்னும் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
பாரதிய மகளிர் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் உள்பட 6 வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியுடன் முறைப்படி இணைந்தன.
இதன்மூலம், உலகிலேயே சொத்துகள் அடிப்படையில் முதல் 50 இடத்தில் உள்ள வங்கிகளில் எஸ்பிஐயும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில்தான், நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளராக இருப்பின், உங்கள் வங்கிக் கிளை தொடர்ந்து செயல்படுமா அல்லது அருகில் இருக்கும் மற்றொரு எஸ்பிஐ வங்கியுடன் இணைக்கப்படுமா என்பதை அறிய இன்னும் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய எஸ்பிஐ வங்கி அதிகாரி ஒருவர், ஒவ்வொரு வங்கிக் கிளையையும் தொடர்ந்து நடத்துவதா? அல்லது அருகில் இருக்கும் வங்கிக் கிளையுடன் இணைப்பதா? அல்லது வேறொரு இடத்துக்கு இடம் மாற்றுவதா என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கவே இன்னும் 3 மாதங்கள் ஆகும்.
ஒவ்வொரு வங்கிக் கிளையும் கையாளும் வங்கிக் கணக்குகள், அருகில் இருக்கும் மற்றொரு எஸ்பிஐயின் வங்கிக் கிளையின் திறன் ஆகியவற்றோடு ஒப்பிட்டு, இட வசதியையும் அடிப்படையாக வைத்து இந்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
ஒரே இடத்தில் இரண்டு வங்கிக் கிளைகள் இருப்பதால் ஏற்படும் குழப்பங்களைத் தடுக்க ஒரு வங்கிக் கிளை மற்றொரு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்படும்.
6 வங்கிகள் எஸ்பிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டதால், நிச்சயமாக யாரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் எஸ்பிஐ வங்கிக்கு 1,888 வங்கிக் கிளைகள் உள்ளன. இதில் எஸ்பிஐ-வங்கியுடையது மட்டும் 721 கிளைகள். ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் வங்கியின் 887 கிளைகளும், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத்தின் 209 கிளைகளும் அடக்கம்.
மேலும் படிக்க : எஸ்பிஐ வங்கியுடன் மகளிர் வங்கி உள்பட 6 வங்கிகள் இணைப்பு

ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய 5 வங்கிகளின் ஊழியர்களும் எஸ்பிஐயுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும், முடிவில் எஸ்பிஐயுடன் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பாரதிய மகளிர் வங்கி உள்பட 6 எஸ்பிஐ சார்பு வங்கிகளும் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்தன.

இந்த வங்கிகளின் இணைப்பு மூலம் எஸ்பிஐயின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மொத்தம் 24ஆயிரமாகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 59ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024