Saturday, April 8, 2017

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவு: சிக்கனமாகப் பயன்படுத்த குடிநீர் வாரியம் வேண்டுகோள்


By DIN  |   Published on : 08th April 2017 04:53 AM  |  
சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 0.70 மீட்டர் முதல் 2.88 மீட்டர் வரை வெகுவாகச் சரிந்துள்ளது. இதனால் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி: சென்னைக் குடிநீர் வாரியம், சென்னை நகரின் நிலத்தடி நீர் மட்டத்தையும், அதன் உப்புத் தன்மையையும் மாதந்தோறும் சென்னையின் பரப்பளவான 426 சதுர கிலோ மீட்டரில், 145 கண்காணிப்புக் கிணறுகள் மூலம் ஆய்வு செய்து வருகிறது.
சென்னை மாநகரில் மணல் சார்ந்த பகுதி, களிமண் சார்ந்த பகுதி மற்றும் பாறை சார்ந்த பகுதி என உள்ள மூன்று விதமான மண் பகுதிகளிலும் நிலத்தடி நீர் அளவு உயர்வு மற்றும் நீர் ஊடுருவும் தன்மை வேறுபடும்.
சென்னை நகரில் மார்ச் 2016 மற்றும் மார்ச் 2017 மாதங்களில் உள்ள நீர்மட்ட அளவுகளின் ஒப்பீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய மார்ச் 2016 மற்றும் மார்ச் 2017 மாதங்களில் உள்ள நீரின் அளவுகளை ஒப்பிடுகையில், சென்னை மாநகரிலுள்ள 15 பகுதிகளில் நிலத்தடி நீர்மட்ட அளவு 0.70 மீ. (சோழிங்கநல்லூர்) முதல் 2.88 மீ. (திரு.வி.க. நகர்) வரை குறைந்துள்ளது. குறைந்த மழைப்பொழிவின் காரணமாக சென்னை குடிநீர் வாரியம் சென்னை மாநகர பொதுமக்களிடம் கீழ்க்கண்ட முறையில் நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறது. குடிநீர் வாரியத்தால் சுத்திகரித்து வழங்கப்படும் நீரை குடிப்பதற்கு மற்றும் சமைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தவும்.
இதர தேவைகளுக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தவும். குழாய் அமைப்பில் ஏற்படும் நீர்க் கசிவை உடனடியாகச் சரி செய்ய வேண்டும். பயன்பாட்டில் இல்லாதபோது குழாயை மூடிவைக்க வேண்டும்.
சமையலறை மற்றும் குளியலறையிலிருந்து வெளியேறும் நீரை தோட்டம், செடிகளுக்கு பாய்ச்சிப் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024