ரயிலில் பிறந்த குழந்தை: 25 வயது வரை இலவசப் பயணம்!
பிரான்ஸ் நாட்டில் ரயிலில் திங்கட்கிழமையன்று பிறந்த குழந்தைக்கு 25 வயது வரை ரயிலில் இலவசமாகப் பயணிக்க அந்நாட்டு ரயில்வே சிறப்புச் சலுகை அளித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசுக்கு கர்ப்பிணி பெண் ஒருவர் நேற்று முன்தினம் (ஜூன் 18) ரயிலில் சென்றுள்ளார். ஆபேர் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் வரும்போது அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு ஊழியர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. செவிலியர்கள், காவலர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் என சுமார் 15 பேர் அப்பெண்ணிற்கு உதவினர். இதற்காக, இருபுறங்களில் செல்லும் ரயில்கள் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. காலை 11.40 மணிக்கு அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதைத் தொடர்ந்து,தாயும் குழந்தையும் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, ரயிலில் பிறந்த குழந்தைக்குச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டது. அதாவது, அந்தக் குழந்தை 25 வயது வரை ரயிலில் இலவசமாகப் பயணம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக, சமூக வலைதளங்களில் தாய்க்கும் பிள்ளைக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
No comments:
Post a Comment