Wednesday, June 6, 2018


தாம்பரம் – நெல்லை அந்த்யோதயா ரயில் ஜூன் 8ல் தொடக்கம்: ரயில்வே அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

Published : 05 Jun 2018 11:12 IST

சென்னை



தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், தஞ்சை வழியாக திருநெல்வேலிக்கு ஏப்ரல் 27 முதல் அந்த்யோதயா விரைவு ரயில் தினமும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கெனவே அறிவித்தது. 16 முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் கொண்ட இந்த ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த்யோதயா ரயில் சேவை தொடங்குவது திடீரென ரத்து செய்யப்பட்டது. இது பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரயில்வே திட்டப் பணிகளை ஆய்வு செய்ய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வரும் 8-ம் தேதி தமிழகம் வருகிறார்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வரும் 8-ம் தேதி தமிழகம் வரும் ரயில்வே அமைச்சர், சில திட்டப்பணிகளை பயணிகளுக்கு அர்ப்பணிப்பார். குறிப்பாக, தாம்பரம் – திருநெல்வேலி அந்த்யோதயா ரயில் சேவையை தொடங்கி வைப்பார்’’ என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024