Friday, June 8, 2018

தாம்பரம் - திருநெல்வேலி புதிய ரயில் துவக்கம்

Added : ஜூன் 08, 2018 05:04




சென்னை:சென்னை, தாம்பரம் - திருநெல்வேலி இடையே, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்ட, அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து இன்று துவங்குகிறது. இதை, ரயில்வே இணை அமைச்சர், ராஜென்கோஹைய்ன் துவங்கி வைக்கிறார்.

கடந்த, 2017 நவ., 1ல், புதிய ரயில் கால அட்டவணை வெளியிடப்பட்டது. அப்போது, 'தாம்பரம் - திருநெல்வேலி இடையே, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்ட, அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு, இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

தாம்பரம் ரயில் நிலையத்தில், இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கும் விழாவில், ரயில்வே இணை அமைச்சர், ராஜென் கோஹைய்ன், அந்யோதயா ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவங்கி வைக்கிறார். இந்த ரயில், 16191 என்ற எண்ணில் இயங்க உள்ளது; இன்று மட்டும், மாலை, 4:30 மணிக்கு புறப்படும். நாளை முதல், தாம்பரத்தில் இருந்து, அதிகாலை, 12:30க்கு புறப்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக, பிற்பகல், 3:30 மணிக்கு, திருநெல்வேலி சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து, 16192 என்ற எண்ணில், மாலை, 5:30க்கு புறப்பட்டு, மறு நாள் காலை, 9:45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயிலில், 16 முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கபட்டிருக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024