வாட்ஸ் ஆப்'பில் அனுப்பப்படும் நோட்டீஸ் செல்லும்: ஐகோர்ட்
Added : ஜூன் 16, 2018 20:36
மும்பை, : 'வாட்ஸ் ஆப்' மூலம் அனுப்பப்படும் வக்கீல் நோட்டீசை திறந்துப் பார்த்தாலே, அதை ஏற்றுக் கொண்டதாக கருதப்படும் என, மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பை நகரை சேர்ந்தவர், ரோஹித் ஜாதவ். இவர், பாரத ஸ்டேட் வங்கியின் கடன் அட்டையை பயன்படுத்திவிட்டு, கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் காலம் கடத்தி வந்தார்.இந்நிலையில், வங்கி சார்பில் பலமுறை அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, பேசாமல் தவிர்த்து வந்தார்.இதையடுத்து, ரோஹித்துக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட, 'நோட்டீஸ்' களையும் அவர் பெற்றுக் கொள்ளாமல் தவிர்த்தார்.எனவே, ஜூன், 8ல், 'வாட்ஸ் ஆப்' மூலம், ரோஹித்துக்கு, வழக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.அதை, அவர் திறந்து பார்த்ததற்கான சான்று, வங்கி அதிகாரிகளிடம் உள்ளது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி,கவுதம் படேல், 'வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்படும், 'நோட்டீஸ்' திறந்து பார்க்கப்படும் பட்சத்தில், அது, எதிர் மனுதாரரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே கருதப்படும்' என தெரிவித்தார்.அடுத்த விசாரணை தேதியில், ரோஹித் ஜாதவ்ஆஜராகாவிட்டால், அவரை கைது செய்ய, 'வாரன்ட்' பிறப்பிக்கப்படும் என,நீதிபதி எச்சரித்தார்.

No comments:
Post a Comment