Monday, June 11, 2018

மாவட்ட செய்திகள்

வல்லக்கோட்டை முருகன் கோவில் குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்



வல்லக்கோட்டை முருகன் கோவில் குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜூன் 11, 2018, 05:30 AM

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தை அடுத்த வல்லக்கோட்டை ஊராட்சியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பிரசித்தி பெற்ற வஜ்ஜிர தீர்த்த குளம் உள்ளது. கடந்த மே மாதம் 19-ந் தேதி வைகாசி விசாக பிரம்மோற்சவவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 31-ந்தேதி விழா முடிவடைந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வஜ்ஜிர தீர்த்த குளத்தில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

தற்போது இந்த குளம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளாக மிதக்கிறது. வேண்டுதலுக்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

எனவே குளத்தில் தேங்கி உள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றி சுத்தப்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என பக்தர்களும், பொதுமக்களும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024