Sunday, June 24, 2018

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில்போலிகளை தடுக்க புதிய விதிமுறைகள் 

dinamalar 24.06.2018

சென்னை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில், போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில், மருத்துவ கல்வி இயக்ககம், விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.




தமிழகத்தில், 2017ல் நடைபெற்ற, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஒன்பது மாணவர்கள் போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்ததாக, புகார் எழுந்தது. இதனால், நடப்பாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், மருத்துவ கல்வி இயக்ககம், விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.

அதன் விபரம்: * தமிழக ஒதுக்கீட்டு

இடங்களுக்கான, கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், 'தமிழர்' என, இடம் கோரமுடியாது

* 'நீட்' நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பத்தில், வேறுமாநிலத்தை, தன் சொந்த மாநிலமாக குறிப் பிட்டவர்கள், தமிழக இடங்களுக்கு, உரிமை கோர முடியாது

* தமிழகத்தில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள், இருப்பிட சான்றிதழ் சமர்பிக்க வேண்டாம். ஆனால், தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, வேறு மாநிலங்களில் படித்திருந்தால், கட்டாயம் இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்

* அந்த மாணவரின் பெற்றோர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிவிக்க, அவர்களது பிறப்பு சான்றிதழ், 10ம் வகுப்பு சான்றிதழ்,பிளஸ் 2 சான்றிதழ், டிப்ளமா அல்லது இளநிலை கல்வி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப அட்டை போன்றவற்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்கள்,
பொது பிரிவினருக்கான பட்டியலில் தான் இடம் பெறுவர்.

* வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்து, தமிழகத்தில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்திருந்தால், நீட் தேர்வுக்கான விண்ணப்பத் தில், தமிழகத்தை சொந்த மாநிலமாக குறிப் பிட்டாலும், அவர்கள், பொது பிரிவினருக்கான பட்டியலில் தான் இடம் பெறுவர்

* போலியான சான்றிதழ்கள் கொடுத்து, படிப் பில் சேர்ந்தது தெரிய வந்தால், மாணவர்கள், கல்லுாரிகளில் இருந்து உடனே நீக்கப்படுவர். மேலும், மாணவர் மீதும், பெற்றோர் மீதும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024