Tuesday, June 19, 2018


பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பதில் குழப்பம்: வாக்குப்பெட்டி, சீட்டுடன் ஓட்டுப்பதிவு நடத்திய வித்தியாசமான தம்பதி

Published : 18 Jun 2018 21:46 IST

பிடிஐ நாக்பூர்,



வாக்கெடுப்பு மூலம் குழந்தைக்கு பெயர் வைத்த தம்பதி - படம்உதவி: ட்விட்டர்

பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பதில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து, தேர்தல் போன்று வாக்கெடுப்பு நடத்தி, அதன் மூலம் பெயரைத் தேர்வு செய்துள்ளார்கள் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி.

மஹாராஷ்டிரா மாநிலம், கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மிதுன். இவர் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி மான்சி பாங். இந்தத் தம்பதிக்கு கடந்த ஏப்ரல் 5-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு பெயர் வைப்பதில் தம்பதிக்கு இடையே குழப்பம் நீடித்தது. இதையடுத்து வாக்கெடுப்பு நடத்தி பெயரைத் தேர்வு செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக தங்களின் உறவினர்கள், குடும்ப நண்பர்கள், மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆகியோருக்குத் தெரிவித்து கடந்த 15-ம்தேதி வாக்கெடுப்பு நடத்தினார்கள். இதற்காகத் தேர்தல் வாக்குப்பதிவு நாள் போல வாக்குச்சீட்டு, பதாகைகள், வாக்குப்பெட்டி, தேர்தல் அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

வாக்குப்பதிவு நண்பகல் வரை நடந்தது. வாக்குச்சீட்டில் யுவன், யாக்ஸ், யாவிக் ஆகிய பெயர்கள் எழுதப்பட்டு இருந்தன. கடந்த 15-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 192 வாக்குகள் பதிவாகின. இதில் 92 பேர் யுவன் என்ற பெயரை தேர்வு செய்ததால், அந்தப் பெயர் குழந்தைக்கு வைக்கப்பட்டது.

இது குறித்து குழந்தையின் தாய் மான்சி பாங் கூறுகையில், ’’எங்களின் குழந்தைக்கு எந்தப் பெயரை வைப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டதால், இதுபோன்ற வித்தியாசமான முறையில் வாக்கெடுப்பு நடத்திப் பெயர் வைக்க முடிவு செய்தோம். இதற்காக உறவினர்கள், நண்பர்களுக்குத் தகவல் கொடுத்தோம். தேர்தல் நாளன்று வாக்குப்பெட்டியும், உள்ளூர் பாஜக எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆகியோரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தோம்.

இதில் 192 வாக்குகளில் 92 வாக்குகள் யுவன் என்ற பெயருக்கு அளிக்கப்பட்டு இருந்ததால், அந்தப் பெயரை எனது மகனுக்குச்சூட்டினோம்'' எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024