அசல் சான்றிதழ் வைத்திருக்க கூடாது கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தல்
கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் அசல் சான்றிதழ்களை வைத்திருக்க உரிமையில்லை' என, பல்கலை மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.
பல்வேறு காரணங்களால் கல்லுாரியிலிருந்து, மாணவர்கள்விலகும் போது கட்டணங்களையும்,அசல் சான்றிதழ்களையும் தர மறுப்பதாக,புகார்கள் எழும்புகின்றன. இதனை தெளிவுபடுத்தும் வகையில், பல்கலை மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அசல் சான்றிதழ்களின் உண்மை தன்மையை, ஆய்வு செய்தவுடன் மாணவர்களிடம் கல்லுாரி நிர்வாகங்கள் ஒப்படைக்க வேண்டும்.
மாணவர்கள் கையெழுத்திட்ட நகல் சான்றிதழ்களே, கல்லுாரியின் பிற அனைத்து செயல்பாடுகளுக்கும் போதுமானது.அட்மிஷன் முடிவதற்கு, 15 நாட்களுக்கு முன்பு கல்லுாரியிலிருந்து வெளியேறும் பட்சத்தில், 100 சதவீதமும், 15 நாட்களுக்குள் எனில் 90 சதவீதமும், 15 நாட்களுக்கு மேல் 30 நாட்களுக்குள் வெளியேறுபவர்களுக்கு, 50 சதவீத கட்டணத்தையும் கல்லுாரி நிர்வாகம் திருப்பி அளிக்க வேண்டும்.
அட்மிஷனுக்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டு, 30 நாட்களுக்குப் பின், கல்லுாரியிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு, கட்டணம் திரும்ப அளிக்க அவசியமில்லை.
இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் யு.ஜி.சி., இணையதளத்தில், இது குறித்த விபரங்களை பார்க்கலாம்.
No comments:
Post a Comment