Wednesday, June 19, 2019

'10:00 மணிக்கு ஆபீஸ் வரணும்!'

Added : ஜூன் 19, 2019 00:23

சென்னை : 'அனைத்து துறை செயலர்களும், அலுவலர்களும், தினமும் காலை, 10:00 மணிக்கு, அலுவலகம் வந்து விட வேண்டும்' என, தமிழக அரசின் தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் அனைத்து துறை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:அரசு செயலர்கள் மற்றும் அலுவலர்கள், காலை, 10:00 மணிக்கு, அலுவலகம் வர வேண்டும். ஆனால், பெரும்பாலானோர், 10:00 மணிக்கு வருவதில்லை; அரசு செயலர்கள், 11:00 மணி, 12:00 மணி என, தங்கள் விருப்பத்திற்கேற்ப, வந்து செல்கின்றனர்.

இதன் காரணமாக, அவர்களை சந்திக்க, காலையில் வருவோர், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அரசு செயலர்கள் அனைவரும், காலை, 10:00 மணிக்கு, அலுவலகம் வந்து விட வேண்டும். அலுவலக நேரத்தில், அலுவலகத்தில் இருக்க வேண்டும்.இந்த உத்தரவை, துறைத் தலைவர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு, கிரிஜா வைத்தியநாதன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024