Sunday, June 16, 2019

வேண்டாமல் தரும் தெய்வம் நீதானே!

Added : ஜூன் 16, 2019 02:56





தாயின் அன்புக்கு சிறிதும் குறைந்தது இல்லை தந்தையின் தியாகம். பிள்ளைகளை தன் தோளில் சுமந்து, சிறகடித்து பறக்க கற்றுக்கொடுப்பவர் தந்தை. பிள்ளைகள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வருவதற்காக, தன்னலமற்ற தியாகத்துடன் ஆயுள் முழுவதும் உழைப்பவர். தந்தையின் உழைப்புக்கு குழந்தைகள் மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது ஞாயிறு (ஜூன் 16) உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

எப்படி வந்தது

அமெரிக்காவில் 1909ல் வாஷிங்டனைச் சேர்ந்த 'சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட்' என்ற இளம் பெண் தான், முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக்கூடாது என வலியுறுத்தினார். இவரது தாய், தனது ஆறாவது பிரசவத்தின் போது மரணம் அடைந்தார். தாயின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம், ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு துாண்டியது.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...