Sunday, July 14, 2019

பதிவாளர் பதவிக்கு  24 பேர் போட்டி

Added : ஜூலை 14, 2019 03:46

மதுரை:மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள, 24 பேரில், குற்ற பின்னணி உடையவர்களின், விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை காமராஜ் பல்கலை, ரெகுலர் பதிவாளர் பணியிடம் காலியாக உள்ளது.புதிய பதிவாளர் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பிக்க கடைசி நாளான, ஜூன், 27 வரை, 24 பேர் விண்ணப்பித்தனர். அவர்களின் விபரம், தற்போது பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த நபர்களில், ஒருவர் மீது, போலீஸ் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், ஒருவர், பாலியல் புகாருக்கு ஆளாகி, விசாரணை நிலுவையில் உள்ளதாகவும், சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனால், மனுக்கள் மீதான பரிசீலனையில், இதுபோன்ற புகார்கள் உள்ளவர்களை, தேர்வுக்குழு நீக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024