Sunday, July 14, 2019

3,968 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பின

Added : ஜூலை 14, 2019 05:37

சென்னை:அரசு ஒதுக்கீட்டில் உள்ள 3968 எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பின.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு எம்.பி.பி.எஸ். - 3968; பி.டி.எஸ். - 1070 இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டுக்கு எம்.பி.பி.எஸ். - 852; பி.டி.எஸ். - 690 இடங்கள் உள்ளன.இதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

இதில் அரசு ஒதுக்கீட்டுக்கு 31 ஆயிரத்து 353 பேரும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 25 ஆயிரத்து 651 பேரும் தகுதி பெற்றனர். அவர்களுக்கான கவுன்சிலிங் சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் 8ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது.

இதில் 3968 எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பியுள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024