Thursday, July 11, 2019

கட்டணத்தில் சலுகை ரயில்வே கோரிக்கை

Added : ஜூலை 10, 2019 22:43

புதுடில்லி : 'ரயில் கட்டண சலுகையை தாமாக முன் வந்து விட்டு கொடுக்க வேண்டும்' என, பயணியரை ரயில்வே துறை கேட்டுக் கொள்ள உள்ளது.

இது பற்றி, ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், ராணுவ வீரர்கள் என பலருக்கும், ரயில்வே, கட்டண சலுகை அளித்து வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழக இணையதளத்தில், டிக்கெட் முன்பதிவு செய்பவர்களிடம், சலுகையை விட்டு தருவதற்கான, வசதி செய்யப்பட்டிருக்கும். ரயில் நிலையங்களில், டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பத்திலும், இத்தகைய கேள்வி இடம் பெற்றிருக்கும்.

கட்டண சலுகை வேண்டாம் என, பயணியர் தாமாக முன்வந்து தெரிவித்தால், முழுமையாக கிடைக்கும் கட்டணம் வாயிலாக, ரயில்வேக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும். இது ஒரு வகையில் கட்டணத்தை மாற்றும் முயற்சி தான். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024