Thursday, July 11, 2019

அத்திவரதர் தரிசனம்: இன்று,நாளை நேரம் குறைப்பு

Added : ஜூலை 11, 2019 06:42

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பொது மக்கள் அத்திவரதரை தரிசிக்கும் நேரம் இன்று, நாளை குறைக்கப்பட்டுள்ளது.



காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோவில் இன்று ஆனி கருட சேவை நடைபெறுகிறது. இதனைமுன்னிட்டு இன்று மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஜனாதிபதி வருகை

அத்திவரதரை தரிசிக்க ஜனாதபதி ராம்நாத் கோவிந்த் நாளை காஞ்சிபுரம் வர உள்ளார். இதனை முன்னிட்டு நாளை பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரையில் பொதுமக்கள் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் அத்திவரதரை 11 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024