சம்பளம் கொடுக்க பணமில்லை திண்டாடும் வீட்டு வசதி வாரியம்
Added : பிப் 06, 2020 22:43
சென்னை; மாதச் சம்பளம் வழங்க பணம் இல்லாததால், வைப்பு நிதியை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு, வீட்டுவசதி வாரியம் தள்ளப்பட்டு உள்ளதாக, ஊழியர் சங்கங்கள் புகார் தெரிவித்து உள்ளன.
இதுகுறித்து, வீட்டு வசதி வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம், வாரிய நிர்வாக இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதம்:கடந்த இரண்டு ஆண்டுகளாக, 5,000 அரசு ஊழியர் குடியிருப்புகள் கட்டுவதற்கு, 1,200 கோடி ரூபாய் வாரிய நிதி செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியை அரசிடம் இருந்து திரும்ப பெற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வாரிய நிதி செலவிடப்பட்டதால், பொது மக்களுக்காக வாரிய இடத்தில், வீடு கட்டி விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முன் எப்போதும் இல்லாத வகையில், இம்மாதம் ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய, வைப்பு நிதியை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மக்களிடம் நிலவும் தேவையை கருத்தில் கொள்ளாமல், பல இடங்களில் கட்டப்பட்ட, 2,800 வீடுகள் விற்கப்படாமல் உள்ளன. இவற்றை விற்கவும், அரசு நிதியை விரைந்து பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment