Thursday, February 13, 2020

எதிரொலி கேட்டான்.. வானொலி படைத்தான்.
..
Updated : பிப் 13, 2020 02:08 | Added : பிப் 12, 2020 23:24





- இன்று உலக வானொலி தினம் -

நவீன உலகில் 'இன்டர்நெட்', 'டிவி', அலைபேசி என பல சாதனங்கள் வந்துவிட்டன. முன்பு மக்களின் தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு சாதனமாக விளங்கியது ரேடியோ (வானொலி). 2010ல் நடந்த யுனெஸ்கோ பொதுக்கூட்டத்தில், உலக வானொலி தினத்தை அறிவிக்க வேண்டும் என ஸ்பெயின் ரேடியோ அகாடமி வலியுறுத்தியது.

இதன்படி ஆண்டுதோறும் பிப்., 13 உலக வானொலி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'வானொலி பன்முகத்தன்மை' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பிரதமர் மோடி 2014, அக்., முதல் மாதந்தோறும் 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

பரிணாமம்:

தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு முக்கியமானது. 'ரேடியஸ்' என்ற லத்தீன் மொழியில் இருந்து ரேடியோ என மருவியுள்ளது. எதிரொலி அடிப்படையில் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே என இரு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை, ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர். இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர் மின்காந்த அலைகளை, டிரான்ஸ்மீட்டராக மாற்றினார்.

பின் இத்தாலியின் குலீல்மோ மார்க்கோனி (1874- - 1937) வானொலியை கண்டுபிடித்தார். இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசு (1909) பெற்றவர். இன்று உலகில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் மக்களுக்கு பல தகவல்களை அளிக்கும் சாதனமாக வானொலியின் சேவை தொடர்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024