பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய பாடகர் எஸ்.பி.பி.,
Added : பிப் 12, 2020 23:29
சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன் பூர்வீக வீட்டை காஞ்சி சங்கரமடத்திற்கு தானமாக வழங்கி உள்ளார்.
ஆந்திராவில் நெல்லுார் மாவட்டத்தில் பிறந்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் பாடகராக மட்டுமல்லாமல் நடிகர் இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.இவர் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை 15க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார்; 45 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். இவரது இசைப்பயணம் ஐந்து தலைமுறைகளை கடந்தது.
காஞ்சி காமகோடி பீடத்தின் தீவிர பக்தர். நெல்லுாரில் தன் சொந்த ஊரான திப்பராஜுவரி தெருவில் உள்ள தன் பூர்வீக வீட்டை சமஸ்கிருத வேத பாடசாலை அமைக்க காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரருக்கு வழங்கி உள்ளார். நெல்லுாரில் உள்ள விஜயேந்திரரை சந்தித்து வீட்டு மனை பத்திரத்தை எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று முன்தினம் வழங்கினார்.

No comments:
Post a Comment