இதனால் சகலமானவருக்கும்.... 1 கிலோ வெட்டுக்கிளிகளை பிடித்து வந்தால் ரூ300 சன்மானம்- நேபாள விசித்திரம்
காத்மாண்டு: படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகளை பிடித்து வந்தால் சன்மானம் வழங்கப்படும் என்று நேபாள நாட்டில் நகராட்சிகள் நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது. தெற்காசிய நாடுகளில் கொரோனாவுடன் வெட்டுக் கிளிகள் கைகோர்த்திருக்கின்றன.
பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் நாடுகளில் வெட்டுக் கிளிகள் படையெடுப்பால் வேளாண் தொழிலே நிர்மூலமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெட்டுக் கிளிகளை நிரந்தமராக அழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது நேபாளத்தில் வெட்டுக்கிளிகள் உக்கிரமாக சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் நேபாளத்தில் Adhikhola என்ற நகராட்சியானது ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதாவது வெட்டுக் கிளிகளை உயிருடனோ அல்லது அழித்தோ பிடித்து வந்தல் 1 கிலோவுக்கு ரூ300 சன்மானம் அளிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஏற்கனவே Kaligandaki என்ற நகராட்சியானது 1 கிலோ வெட்டுக் கிளிகளுக்கு ரூ100 வழங்கப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
source: oneindia.com
Dailyhunt
No comments:
Post a Comment