பணியாளர்களுக்கு பழைய, 'இ - -பாஸ்' செல்லும்
Added : ஜூலை 05, 2020 05:42
சென்னை; 'மாவட்டங்களுக்கு இடையே, பணியாளர்கள் சென்று வர, ஏற்கனவே பெற்ற, 'இ - பாஸ்' போதும்; அதையே பயன்படுத்திக் கொள்ளலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள்; செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், குறிப்பிட்ட பகுதிகளில், ஜூன், 19ல் இருந்து, இன்று வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இப்பகுதிகளில், நாளை முதல், தொழில் நிறுவனங்கள், 50 சதவீத பணியாளர்களுடனும், மற்ற பகுதிகளில், 100 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட, அனுமதி அளித்து, ஜூன், 30ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மாவட்டங்களுக்கு இடையே, பணியாளர்கள் பணிக்கு சென்று வர, 'இ- - பாஸ்' அவசியம். மாவட்டத்திற்குள் பணிக்கு சென்று வர, 'இ- - பாஸ்' அவசியமில்லை.மாவட்ட கலெக்டர்களால், ஜூன், 19க்கு முன், மாவட்டங்கள் இடையே, பணிக்கு சென்று வர வழங்கப்பட்ட, 'இ- - பாஸ்'களை, தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாளையில் இருந்து, மாவட்டங்கள் இடையிலான போக்குவரத்திற்கு, புதிதாக, 'இ- - பாஸ்' மற்றும் இதர பாஸ்கள் பெற வேண்டியதில்லை.இதுவரை, 'இ- - பாஸ்' பெறாதவர்கள், உரிய நடைமுறைகளின்படி, விண்ணப்பம் செய்து, அதை பெற்றுக் கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment