வெளிநாட்டினருக்கான பி.இ. கலந்தாய்வு அறிவிப்பு
By DIN |
Published on : 15th April 2017 03:37 AM |
வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள்,
வெளிநாட்டினருக்கான பொறியியல் சேர்க்கைக் கலந்தாய்வு அறிவிப்பை அண்ணா
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 28,
29 ஆகிய இரு தினங்கள் நடத்தப்பட உள்ளது.
இதில் வெளிநாட்டினருக்கான கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதியன்றும், வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் குழந்தைகள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 29-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஜூன் 20 கடைசித் தேதியாகும். இதுகுறித்த மேலும் விவரங்களை www.annauniv.edu என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment