சென்னை: 'பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அன்னிய செலாவணி
மோசடி வழக்கில், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என, அமலாக்கத்
துறை வலியுறுத்தி உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியரான சுசீலா என்பவர்
உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து, சென்னையை சேர்ந்த பரணி பீச் ரிசார்ட்ஸ்
நிறுவனம், இந்தியன் வங்கியில் இருந்து, 3 கோடி ரூபாய் கடன் பெற்றது. இதில்,
2.20 கோடி ரூபாயை, கோடநாடு எஸ்டேட் வாங்க, சசிகலா பயன்படுத்தியதாகவும்,
இதில் அன்னிய செலாவணி சட்ட விதிகள் மீறப்பட்டதாகவும், அமலாக்கத் துறை
வழக்கு தொடர்ந்தது. அத்துடன், ஜெஜெ 'டிவி'க்கு, கருவிகள் வாடகைக்கு
எடுத்ததிலும், அன்னிய செலாவணி விதிகளை மீறியதாக, மூன்று வழக்குகள் பதிவு
செய்யப்பட்டன.
வெளிநாட்டு நிறுவனங்களான, 'ரிம்சாட், சுபிக்பே மற்றும் அப்பூப்ஸ்' நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு பணத்தை மாற்றியதாகவும், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. வெளிநாடுகளில், ஒயின் நிறுவனம் மற்றும் ஓட்டல்கள் துவங்க, சட்டவிரோதமாக தினகரன் முதலீடு செய்ததில், அன்னிய செலாவணி மோசடி நடந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.பரணி ரிசார்ட்ஸ் வழக்கில் இருந்து, சசிகலாவை, எழும்பூர் பொருளாதார நீதிமன்றம் விடுவித்தது. தினகரன் மீதான இரண்டு வழக்குகளிலும், அவர் விடுவிக்கப்பட்டார்.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுக்கள் தாக்கல் செய்தது. மூன்று வழக்குகளில் இருந்தும் விடுவிக்கக் கோரி, சசிகலா தரப்பிலும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் இருந்து சசிகலா, தினகரன் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து, வழக்கை எதிர்கொள்ளும்படி உத்தரவிட்டது. சசிகலாவின் மனுக்களையும், தள்ளுபடி செய்தது
. இதையடுத்து, இந்த வழக்குகளை, எழும்பூர் பொருளாதார நீதிமன்ற மாஜிஸ்திரேட் மலர்மதி விசாரித்து வருகிறார். நேற்று, இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை சார்பில் வழக்கறிஞர் தண்டபாணி ஆஜரானார். அப்போது, சசிகலா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராக, அவரது சார்பில் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்ததற்கு, அமலாக்கத்துறை வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். சசிகலா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, வலியுறுத்தினார். அவர் வாதாடியதாவது:தினகரன், வெளிநாடு வாழ் குடியுரிமை பெற்றவர். அதனால், அவர் வெளிநாடுகளில் முதலீடு செய்தது, அன்னிய செலவாணி மோசடி செய்ததாக ஆகாது என, அவரது வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். இது, ஏற்கத்தக்கது அல்ல.சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், தினகரன், இந்திய பிரஜை தான் என்பதை உறுதி செய்துள்ளன.
இதனால், அவர் வெளிநாடுகளில் முதலீடு செய்ததில், முறைகேடு நடந்து இருப்பதும், அன்னிய செலாவணி மோசடி நடந்து இருப்பதும் நிரூபணமாகிறது. அதுபற்றி, 12 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.அதேபோல, சசிகலாவும், அன்னிய செலவாணி மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபற்றி, மேலும் மூன்று சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டி உள்ளது.இவ்வாறு அவர் வாதிட்டார். அதற்கு, தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட் மலர்மதி, தினகரன் மீதான வழக்கை, ஏப்., 13க்கும், சசிகலா மீதான வழக்குகளை, ஏப்., 18க்கும் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment