Wednesday, April 12, 2017

 அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது கார் ஓட்டுநர் எடுத்துக்கொண்டு ஓடிய ஆவணங்கள் என்ன? - வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை


அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது, கார் ஓட்டுநர் எடுத்துக்கொண்டு ஓடிய ஆவணங்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற இருந்ததையொட்டி வாக்காளர் களுக்கு சிலர் பணம் கொடுத்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்தபோது, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை தெரிவித் துள்ளனர். அதைத்தொடர்ந்து கடந்த 7-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மத்திய போலீஸாரின் பாதுகாப்பையும் மீறி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் சில அமைச்சர்கள் விஜயபாஸ்கரின் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. 

இந்த இடைவெளியை பயன் படுத்தி, தளவாய் சுந்தரம் அங் கிருந்த முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு வெளியே வந் தார். அந்த ஆவணத்தை அங் கிருந்த ஒருவரிடம் கொடுத்தார். அதை பாதுகாப்பு படையினர் பார்த்துவிட்டனர். அவரிடம் இருந்து வாங்குவதற்குள், அருகேயிருந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் கார் ஓட்டுநர் உதயகுமார்(30), அந்த ஆவணத்தை அவரிடம் இருந்து பிடுங்கிக்கொண்டு வெளியே ஓட ஆரம்பித்தார்.
அவரை பாதுகாப்பு படை வீரர்கள் துரத்திச் சென்றனர். ஆனால், கையில் வைத்திருந்த ஆவணத்தை அவர் மதில் சுவருக்கு வெளியே வீசி எறிந்தார். வெளியில் இருந்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர் ஒருவர், அந்த ஆவணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார். அவரை மத்திய போலீ ஸாரால் பிடிக்க முடியவில்லை. 

இதனால், ஆவணத்தை வெளியே வீசிய உதயகுமாரை மத்திய போலீஸார் அடித்ததாக கூறப்படுகிறது. கார் ஓட்டுநர் உதயகுமாரிடம் வருமான வரித் துறையினர் நடத்திய விசாரணை யில், அவர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் என்பது தெரிந்தது. இவர் கடந்த 3 ஆண்டுகளாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கார் ஓட்டுநராக இருக்கிறார். 

அமைச்சரின் கார் ஓட்டுநரை தாக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய போலீ ஸார் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட் டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ் கரின் ஆதரவாளரான முரளி என்ப வர் இந்த புகாரை கொடுத்துள்ளார். புகாரின்பேரில் அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் உள்ள கண் காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். 

நேற்று முன்தினம் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது கார் ஓட்டுநர் மூலம் மறைக்கப்பட்ட ஆவணம் குறித்து துருவி துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024