Sunday, April 2, 2017

தமிழகத்தை வாட்டும் வெயில்.. சேலம், மதுரை, திருச்சி உள்பட 7 இடங்களில் சதம் அடித்தது

சென்னை: தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று 100 டிகிரிக்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கரூர் நகரில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் துவக்க மாதமான மார்ச் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. இதில் அதிகபட்சமாக கரூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கோவை, தருமபுரி, கரூர், மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி, நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களில் 90 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவாகியுள்ளது. தலைநகர் சென்னையில் 96 டிகிரி வெப்பம் பதிவானது. கடலூரில் 92 டிகிரி, கன்னியாகுமரியில் 95, நாகையில் 93 டிகிரி வெப்பம் பதிவானது. தஞ்சாவூரில் 82 டிகிரி, தூத்துக்குடியில் 92 டிகிரி, தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக கொடைக்கானலில் 68 டிகிரி வெப்பம் பதிவானது.

நேற்றைய அளவை விட இன்று வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. வெயில் தாக்கத்தின் காரணமாக இளநீர், பதனீர், பழ ஜூஸ் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Source: tamil.oneindia.com
source: oneindia.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024