Monday, March 26, 2018


'ஆப்'களை உஷாராக பயன்படுத்தவும்!   நிபுணர்கள் எச்சரிக்கை 
26.03.2018  dinamalar

புதுடில்லி: 'பேஸ்புக் சமூகதளத்தை பயன்படுத்துவோரின் தனிநபர் தகவல்கள் திருடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.'மூன்றாம் தரப்பினரின், 'ஆப்'களைப் பயன்படுத்தும்போது, நம் தகவல்களை பயன்படுத்த அனுமதிப்பதில் உஷாருடன் இருக்க வேண்டும்' என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.





ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, 'கேம்பிரிட்ஜ் அனாலிடிகா' என்ற நிறுவனத்தின் சேவையை, அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, தற்போதைய அதிபர், டொனால்டு டிரம்ப் பயன்படுத்தினார். 'பேஸ்புக்' சமூக தளத்தைப் பயன்படுத்தும், ஐந்து கோடி பேரின் தகவல்களை,அந்த நிறுவனம் திருடி, அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தியது தற்போது தெரிய வந்து உள்ளது.இது, உலகெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பல்வேறு மொபைல், 'ஆப்'களை பயன்படுத்தும்போதும் எச்சரிக்கையுடன்

இருக்க வேண்டும் என, சைபர் பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறியுள்ளனர். நிபுணர்கள் கூறியதாவது: சமூக தளங்களைப் பயன்படுத்தும்போது, நம் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் அளிக்கிறோம். நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாத தகவல்களை மட்டுமே அளிக்க வேண்டும்.

அதேபோல், மொபைல் ஆப்களை பயன்படுத்தும் போது, மொபைலில் உள்ளநம்மை பற்றிய எந்தெந்த தகவல்களை அது பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு அனுமதி அளிக்கும்போது, எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, நம் மொபைலில் உள்ள, 'கான்டாக்ட்'களை பயன்படுத்த அனுமதித்தால், அது நமக்கும், நம்முடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கிவிடும்.

பேஸ்புக் போன்ற மிகப் பெரிய நிறுவனத்தின் தகவல்களையே திருடுவோர், இவ்வாறு நாம் கொடுக்கும் தகவல்களைத் திருடுவதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம்.டிஜிட்டல் பயன் பாட்டுக்கு, நாம் மாறி வரும் நிலையில், சைபர் பாதுகாப்பை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவ துடன், மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்திட வேண்டும்.


மிகப்பெரிய மக்கள் தொகை, மிகப் பெரிய சந்தை உள்ளதால், நம் நாட்டின் தகவல்களை திருடு வதற்கு, இணையத் திருடர்கள் முயற்சிக்கின்றனர். அதனால், சமூகதளங்களில் மட்டுமல்லாமல், ஆப்களை பயன்படுத்தும்போதும், மிகவும்

கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

'வெள்ளைக்காரன் முன் நிர்வாணமாக நிற்கலாமா?'

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை இணையமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, கே.ஜே. அல்போன்ஸ் கூறியதாவது:ஆதார் தகவல்கள் திருடப் படுவ தாக, பொய்யான ஒரு தகவலை சிலர் பரப்பி வருகின்றனர். அமெரிக்காவுக்கு செல்வதற் கான, 'விசா' பெறுவதற்கு, 10 பக்கத்துக்கான விண்ணப்பத்தை எந்த கேள்வியும் கேட்காமல் நிரப்புகின்றனர்.

சோதனை என்ற பெயரில், வெள்ளைகாரன் நிர்வாணமாக நிற்க சொன்னாலும், அதற்கு தயாராக உள்ளனர். ஆனால், மக்களுக்கு திட்டங்கள் சென்றடை வதற்காக, உங்கள் விபரங்களை தாருங்கள் என, அரசு கேட்டால், அது தனிமனித உரிமையை மீறும் செயல் என, பிரசாரம் செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.




No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...