Monday, March 26, 2018

ஆதாரை உறுதி செய்ய ஜூலையில் புதிய வசதி

Added : மார் 26, 2018 01:59 |

புதுடில்லி: ஆதாரை பயன்படுத்தும்போது, அதை உறுதி செய்வதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவற்றுடன், முகத் தோற்றத்தையும் பயன்படுத்தும் வசதி, ஜூலை, 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குகளை, உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரிக்கிறது. ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, 'பவர் பாயின்ட்' மூலம், ஆதார் பயன்பாட்டின் அவசியத்தை விளக்கினார்.தற்போது, பல்வேறு சேவைகளுக்கு ஆதார் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர, ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்காக, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணையும் பயன்படுத்தலாம்.அந்த வரிசையில், 'முக வடிவமைப்பை பயன்படுத்தி, ஆதாரை உறுதி செய்யும் வசதி, ஜூலை, 1 முதல், நடைமுறைக்கு வரும்' என, உச்ச நீதிமன்றத்தில் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...