Monday, March 26, 2018

 முதுநிலை மருத்துவ படிப்புக்கான, கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டுள்ளது

Added : மார் 26, 2018 00:19

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான, கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டுள்ளது.முதுநிலை மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 50 சதவீத இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கவுன்சிலிங்கை, மத்திய சுகாதார துறையின், சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்துகிறது. அதன்படி, கவுன்சிலிங்கிற்கான நடைமுறைகள், 17ல் துவங்கின. நேற்றும், இன்றும், முதற்கட்ட கவுன்சிலிங் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில் பங்கேற்போர், தங்களுக்கு விருப்பமான இடங்களை தேர்வு செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. இடங்களை தேர்வு செய்யும் நடைமுறைகளிலும், சில குழப்பங்கள் ஏற்பட்டன. அந்த பிரச்னை சரி செய்யப்படுவதால், முதற்கட்ட கவுன்சிலிங், நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஏற்கனவே அறிவித்தபடி, ஏப்., 9, 10ம் தேதிகளில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...