Monday, March 26, 2018

பரவுது தவறான தகவல் : 31ல் வங்கிகள் உண்டு

Added : மார் 26, 2018 00:21

திருப்பூர்: 'வங்கிகளுக்கு, தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை இல்லை; 31ம் தேதி, வழக்கம் போல் இயங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வங்கிகளுக்கு, வாரந்தோறும், இரண்டாவது, நான்காவது சனிக் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.மகாவீரர் ஜெயந்தி, புனித வெள்ளி, நிதியாண்டு நிறைவு உட்பட காரணங்களால், வரும், 29 முதல், ஏப்., 2 வரை, ஐந்து நாட்களுக்கு, வங்கி களுக்கு தொடர் விடுமுறை என, சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது.வரும், 29, 30ம் தேதி விடுமுறை; 31ல், வங்கி கணக்கு முடிப்பு என்றாலும் கூட, அன்று வழக்கம் போல், வங்கி செயல்படும் என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி - கனரா, மேலாளர் சுந்தரமூர்த்தி கூறியதாவது:சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் தவறானது. கடந்த காலங்களில், கணக்கு முடிப்பு என்பது, வங்கி கிளை வாரியாக நடந்தது. தற்போது, அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டதால், வங்கி தலைமை, மண்டலங்கள் இடையே, கணக்கு முடிப்பு பணி நடக்கிறது; இதற்கு விடுமுறை அளிக்கும் நடைமுறை மாறிவிட்டது.ஏப்., 2ல், கணக்கு முடிப்பு விடுமுறை அளிக்க, வங்கியாளர் சங்கங்கள், ரிசர்வ் வங்கியிடம் மனு அளித்துள்ளன; இதுவரை, ரிசர்வ் வங்கி, விடுமுறை அறிவிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...