Monday, March 26, 2018

மதுரை-சிங்கப்பூர் தினசரி விமான சேவை

Added : மார் 26, 2018 04:38

அவனியாபுரம்: மதுரை-சிங்கப்பூர் விமான சேவை நாளை (மார்ச் 27) முதல் தினசரி சேவையாக மாறுகிறது.ஏர் இந்தியா நிறுவனம் தற்போது வாரத்தில் 4 நாட்கள் சிங்கப்பூருக்கு விமானம் இயக்குகிறது. நாளை முதல் தினசரி இயக்கப்படுகிறது.மதுரையிலிருந்து சனி, ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு11:15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 6:15 மணிக்கு சிங்கப்பூர் சென்றடையும். இந்த விமானம் டில்லியிலிருந்து மதுரை வந்து சிங்கப்பூர் செல்லும்.செவ்வாய், வியாழக்கிழமைகளில் மதியம் 12:05 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 7:05 மணிக்கு சிங்கப்பூர் சென்றடையும். இந்த விமானம் கொச்சியிலிருந்து மதுரை வந்து சிங்கப்பூர் செல்லும்.மறுமார்க்கமாக சிங்கப்பூரிலிருந்து ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் சிங்கப்பூர் நேரப்படி காலை 10:45 புறப்பட்டு மதியம் 12:30 மணிக்கு மதுரை வந்தடையும். செவ்வாய், வியாழன் கிழமைகளில் இரவு 8:10 மணிக்கு சிங்கப்பூரில் புறப்பட்டு இரவு 10:00 மணிக்கு மதுரை வந்தடையும்.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...