யார் பொறுப்பு ?
By பாறப்புறத் இராதாகிருஷ்ணன் | Published on : 26th March 2018 02:31 AM |
| இழந்தால் பெற முடியாதது இரண்டு, ஒன்று உயிர், இன்னொன்று ஒழுக்கம். மனித வாழ்க்கையில் இளமைப் பருவம், மாணவப் பருவம் கிடைத்தற்கரியது.
"இளங்கன்று பயமறியாது' என்ற சொலவடைக்கேற்ப, பெருநகரங்களில் வாகனங்கள் நெருக்கம் அதிகமாகவுள்ள சாலைகளில் சிறார்கள் தங்கள் பெற்றோர்களின் வாகனங்களை ஓட்டுவதும், பந்தயங்களில் ஈடுபடுவதும், மூன்று பேர் ஓரே வாகனத்தில் அமர்ந்துச் சென்று விபத்துகளை ஏற்படுத்துவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிறுவர்கள் இரு சக்கர மோட்டார் வாகனங்களை ஓட்டுவது என்பது அவர்களுக்கு மட்டும் ஆபத்தாக முடிவதில்லை, சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் பெரும் ஆபத்தாக முடியும் என்பதை அவர்கள் உணர்வதேயில்லை.
சீருடை அணிந்த மாணவர்களும், பள்ளிக்கு வேகமாக இரு சக்கர மோட்டார் வாகனத்தில் செல்வதை இப்போதெல்லாம் சாதாரணமாகி வருகிறது. குறிப்பாக, இவர்கள் தங்களது வீரபராக்கிரமங்களை சாலையில்தான் காண்பிக்கிறார்கள். சாலை விதிகளை பின்பற்றாமல், முன் செல்லும், பேருந்தையோ, லாரியையோ அஞ்சாத மனநிலையில், பொறுப்பற்ற முறையில் முன்னேறிச் செல்ல முயற்சிக்கும்போதும், போக்குவரத்து காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்த முயலும் போது, அச்சத்தினால் விரைந்து வாகனத்தை ஓட்டி கீழே விழுந்து பலத்த காயமடைந்து உயிரையும் இழக்கிறார்கள்.
சிறுவர்கள் வாகனம் ஓட்டி ஒருவர் பலத்த காயமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ அவரின் குடும்பம் சட்டத்திற்குட்பட்டு நிவாரண நிதியைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல எனத் தெரிவிக்கிறார் பிரபல வழக்குரைஞர் ஒருவர்.
ஓட்டுநர் உரிமம் பெற முடியாத சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுவது என்பது கடுங்குற்றம். இது குறித்து நாங்கள் அவ்வாறு வாகனங்களை ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்களை அழைத்து விசாரித்தால், தங்கள் பொறுப்பை தட்டிக் கழிக்கின்றனர் என்கிறார் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி. கண்டிப்பையும், உறுதியையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய பெற்றோரே இப்படியிருந்தால் விளைவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
பல சமயங்களில் பெற்றோர்கள்தான் சிறுவர்களை இரு சக்கர மோட்டார் வாகனங்களை இயக்க அனுமதிக்கிறார்கள். அதைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு பெற்றோர்களிடம்தான் உள்ளது. அதனால் பெற்றோர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.
தங்கள் பிள்ளைகள் இரு சக்கர மோட்டார் வாகனங்கள் ஓட்டுவது என்பது பேராபத்து என்பதை உணராமல் பல பெற்றோர்கள் அதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். உயர் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்கள் ஓட்டக் கூடாது என்று போக்குவரத்து விதிகள் தெரிவித்திருந்தாலும், அதை உணராமல் 10-ஆம் வகுப்பு அல்லது ப்ளஸ் 2 படிக்கும் போதே இரு சக்கர மோட்டார் வாகனங்களை வாங்கிக் கொடுத்து இலவச இணைப்பாக பல்வேறு தொல்லைகளையும் பெறுகிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குக் கூட பெற்றோர் விலையுயர்ந்த இரு சக்கர வாகனங்களை வாங்கிக் கொடுக்கின்றனர். அந்த வாகனங்களை மாணவர்களால் கையாள முடியாது. தன் ஒரு குழந்தையை பெற்றோரால் கட்டுப்படுத்த முடியாத போது லட்சக்கணக்கான இளைஞர்களை காவல் துறையினரால் எவ்வாறு கட்டுப்படுத்த முடியம்? தமிழகத்தைப் பொருத்தவரை 25 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் தான் அதிக அளவில் சாலை விபத்துகளில் சிக்குகின்றனர் என்கிறார் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர்.
தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு, அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் வாகனங்களை ஓட்டி உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை பத்தொன்பது. வேகமாக இரு சக்கர மோட்டார் வாகனம் ஓட்டியதற்காக 62,276 மீதும், கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டியதற்காக 5,287 பேர் மீதும், தலைக்கவசம் அணியாததற்காக 3,41,332 பேர் மீதும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக 5,683 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து மட்டுமே இதுவரை மட்டுமே, இரு சக்கர மோட்டார் வாகனத்தை வேகமாக ஓட்டியதற்காக 12,933 பேரின் மீதும், கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டியதற்காக 825 பேரின் மீதும், தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக 82, 012 பேர் மீதும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக 779 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் வாகனங்களை ஓட்டி உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 2.
மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 180-இன்படி ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர் அல்லது 18 வயதுக்கு குறைவான நபர் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இக்குற்றத்துக்கு அந்தச் சட்டத்தின்படி ரூ.1000 அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கலாம். இல்லையெனில் இரண்டு தண்டனைகளையும் சேர்த்தே விதிக்கலாம்.
எனவே, போக்குவரத்து காவல் துறை 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக் கூடாது என எச்சரித்துள்ளது. மேலும், சிறுவர்களிடம் தங்களது வாகனத்தை ஓட்ட வழங்கும் உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறை எச்சரித்துள்ளது.
சிறுவர்கள் மாணவர்களாக இருக்கும்போதே கடமை உணர்வோடு, கண்ணியம் காத்து, கட்டுப்பாட்டோடு செயலாற்றும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே, சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோர்களும், ஆசிரியர்களும், காவல் துறையும் பொறுப்பாக மாட்டார்கள். உலகம் பழிப்பவற்றை விலக்கி, சிறுவர்கள்தான் இப்பொறுப்பை உணர்ந்து, ஏற்று போக்குவரத்து விதிகளை முறையாகவும், சட்டத்தையும், விதிகளையும் மதித்து நடந்து, பெற்றோரையும், ஆசிரியரையும் போற்றி வணங்கி, ஒழுக்கமாகவும், பண்புடன் நடந்து சமூகத்தில் மதிப்பு மிக்க குடிமகனாக உயர வேண்டும்.

No comments:
Post a Comment