Saturday, May 19, 2018

ஆட்சி அமைப்பதில் அவசரப்பட்டு விட்டோமா? பா.ஜ.,வுக்குள் எழுந்துள்ள திரைமறைவு கவலை 

dinamalar 19.05.2018

'கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் அவசரப்பட்டு இறங்கியது, எதிர்வரும் தேர்தல்களை பாதிக்குமோ' என்ற கவலை, பா.ஜ., தலைவர்களிடையே எழுந்துள்ளது.



கர்நாடகா சட்டசபைத் தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக, பா.ஜ.,உருவெடுத்துள்ளது. ஆனாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இடங்களை, அந்த கட்சி பெறவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியானதும், ஆட்சி அமைப்பது குறித்து பரபரப்பான நடவடிக்கைகள் பெங்களூரில் துவங்கினாலும், பா.ஜ.,வின் டில்லி மேலிட வட்டாரங்களில்,வேறு குழப்பங்கள் நிலவின.

ஆலோசனை

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறிய தாவது: பா.ஜ.,வின் மூத்த அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும், 'நிலைமை தெளிவாக இல்லை. அவசரம் காட்டும் அதே நேரத்தில், மிகுந்த ஜாக்கிரதையாக யோசித்து செயல்படுவதே சரி' என, ஆலோசனை கூறினர்.

குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ்., வட்டாரங்களில், ஆட்சி அமைப்பது தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் எழுந்தன. 'அவசரப்படுவதில் அர்த்தம் இல்லை' என கூறியதாகவும் தெரிகிறது.

காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், அது,

ஒரு சில மாதங்களிலேயே கவிழ்ந்திருக்கும். நிச்சயம், அந்த கூட்டணி ஆட்சி நீடித்திருக்காது என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். மதச் சார்பற்ற ஜனதா தளம் வென்றுள்ள தொகுதிகள் எல்லாமே, காங்கிரசுடன் நேரடியாக மோதி வென்ற தொகுதி கள். காவிரி பாயும் மாண்டியா, ஹசன், பழைய மைசூரு உள்ளிட்டபகுதிகள் முக்கியமானவை.

இப்பகுதிகளின் மொத்த ஓட்டு வங்கியையும், காங்கிரசும், மதச் சார்பற்ற ஜனதா தளமும் தான் பிரிக்கின்றன. இவர்கள் தான், நேரடி போட்டியாளர் கள். ஒருவருக்கு ஒருவர், எதிர்த்து தான் அரசியல் செய்தாக வேண்டும்.

குடைச்சல்

பரம விரோதிகளாக இருந்துவிட்டு, திடீரென கூட்டணி உருவாகியதை, மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதோடு, வெற்றி பெற்ற, எம்.எம்.ஏ.,க்களால் செயல்படவே முடியாத சூழல் ஏற்படும்.

மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் ஒவ்வொரு, எம்.எல்.ஏ., வுமே, அமைச்சராக ஆசைபடும் நிலையில்,மொத்த அமைச்சரவையே போதாது என்பதே நிலை. அதில், காங்கிரஸ் தரும் குடைச்சலும் இருக்கும். நிச்சயம் குழப்பம் உருவாகும்; கூட்டணி முறியும் என்பது போன்ற வாதங்களை, சில தலைவர்கள், கட்சியின் உள்மட்டத்தில் விவரித்தனர்.

ஆனால், கட்சி தலைவர் அமித் ஷாவின் உறுதி யான நிலைப்பாடுமற்றும் உத்தரவின் முன், எதுவுமே எடுபடவில்லை.சந்தர்ப்பவாத கூட்டணியை அம்பலப்படுத்த கிடைத்த வாய்ப்பு நழுவி விட்டது; தானாக கவிழ்ந்திருக்க வேண்டிய கூட்டணி ஆட்சியாளர்களுக்கு, தற்போது, பொதுவெளியில் அனுதாப அலை உருவாகும் அபாயமும் உள்ளது.

குமாரசாமி மற்றும் தேவகவுடாவிடம் பேச்சு நடத்துவதற்கு, அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களை, பா.ஜ., தலைமை அனுப்பி வைத்தது ஏன் என்பதும் தெரியவில்லை.

தற்போது, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரள்கின்றன. கோவா, மணிப்பூர், பீஹார் மாநிலங்களில், தனிப் பெரும்பான்மை உள்ள கட்சிகள், ஆட்சியமைக்க உரிமை கோரி படையெடுக்கின்றன.

பின்னடைவு

இதே வேகத்தில் சென்றால், அரசியல் சட்ட நெருக்கடியே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கவர்னரின் முடிவை ஏற்காமல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு, பா.ஜ., வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா விவகாரத்தில், அவசரம் காட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தல் மற்றும் அதற்கு முன், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தல்களையும் பாதிக்கச் செய்து விடும் என, மூத்த தலைவர்கள் சிலர் கவலை தெரிவித்து உள்ளனர்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது டில்லி நிருபர் -

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...